ETV Bharat / bharat

கல்வானில் என்னதான் நடந்தது?

author img

By

Published : Jun 18, 2020, 7:20 PM IST

கிழக்கு லடாக்கில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டில் நிலை பெற்றுள்ள ராணுவ வீரர்களுக்கு முக்கியமான பொருள்கள் டி.பி.ஓ. சாலை வழியாகதான் செல்கின்றன. அச்சாலையை பாதுகாத்து வரும் பள்ளத்தாக்கு இந்திய ராணுவத்திற்கு எவ்வளவு முக்கியம் என்பதை சீனா புரிந்து கொண்டுள்ளது.

India China face-off
India China face-off

ஒரு தோட்டா கூட சுடப்படாமல் இந்திய, சீனா ராணுவங்களுக்கிடையே ஒரு அச்சுறுத்தும் வன்முறை சம்பவம், லடாக்கின் கல்வான் பகுதியில் அரங்கேறியுள்ளது. இது. கடந்த அரை நூற்றாண்டு காலத்தில் நடைபெறாத ஒன்று.

இரும்பு தடி, கற்கள் போன்ற ஆயுதங்களைக் கொண்டு சீன ராணுவம் இந்திய ராணுவத்தை தாக்கியதற்கு காரணம் என்ன?

சீன விவகாரத்தை தொடர்ந்து கண்காணித்து வருபவர்கள் இதற்கு விடை அளிப்பார்கள். நீண்ட நாள்களாக இருக்கும் கோபத்தை சீனா வெளிப்படுத்தியுள்ளது. புதன்கிழமை இரவு, சீன வீரர்களை இந்திய வீரர்கள் நேரடியாக எதிர் கொண்டு போரில் ஈடுப்பட்டது முக்கியமாகப் பார்க்கப்படுகிறது. ஏனெனில், இந்திய வீரர்கள் நிலைகொண்ட பகுதியை சீனா ஆக்கிரமிப்பு செய்தது.

எல்லைக் கட்டுப்பாட்டு கோடு

கருத்து வேறுபாடுள்ள இருநாடுகளும் எல்லையைத் தீர்மானிக்கும் நோக்கில் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டை வகுத்துக் கொண்டது. இதன்மூலம், இருநாட்டு ராணுவ வீரர்களும் தங்களுக்குத் தோன்றும் இடத்தில் நிலைபெற்றுக் கொண்டனர்.

லடாக் பகுதியில் இரு நாடுகளுக்கிடையே, குறிப்பிடும்படியாக எந்த வரையறைக் கோடும் வகுக்கப்படவில்லை. இதனால், எந்த அளவு வரை தங்கள் கட்டுப்பாட்டில் பகுதிகளை வைத்துக் கொள்ளலாம் என்ற முடிவை, இரு நாடுகள் மேற்கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் ராணுவ உயர் அலுவலர்களே எடுக்கின்றனர்.

மிக உயரிய பகுதியான எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டில் பெரும்பாலும் ராணுவ வீரர்களே குவிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவுக்கு உட்பட்ட பகுதியில் இந்தோ - திபெத் எல்லைக் காவல் படை நிலைபெற்றுள்ளது.

எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டில் உள்ள பாங்காங் ஏரி, கல்வான் பள்ளத்தாக்கு ஆகியவை சர்ச்சைக்குரிய பகுதிகளாக உள்ளன. மூன்றில் ஒரு பங்கு ஏரி சீனாவிடமும், மீதமுள்ளவை இந்தியாவிடமும் உள்ளது.

பிங்கர் 4, பிங்கர் 8 என இரு பகுதிகள் நிர்ணயிக்கப்பட்டு, பிங்கர் 4 என்ற பகுதியை சீனாவும், பிங்கர் 8 என்ற பகுதியை இந்தியாவும் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடாக வகுத்துக் கொண்டது. டி.பி.ஓ. சாலையில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில்தான் இந்த வன்முறை சம்பவம் நிகழ்ந்தது.

வடக்கு லடாக் பகுதிக்கு பொருள்களை விநியோகம் செய்வதில் இச்சாலை முக்கியப் பங்காற்றுகிறது. பிரதான சாலையைப் பாதுகாப்பதால் கல்வான் பள்ளத்தாக்கு முக்கியமாக பார்க்கப்படுகிறது. பிங்கர் 4 என்ற பகுதிக்கு செல்ல சீன ராணுவம் முயற்சி செய்ததற்கு இதுவே காரணமாகும். இதுவே, தாக்குதலுக்கு வழி வகுத்தது.

கல்வான் பள்ளத்தாக்கு

கல்வான் பள்ளத்தாக்கை இந்திய ராணுவம் முக்கியமான ஒன்றாகக் கருதுகிறது. கல்வான் பள்ளத்தாக்கின் பின் பகுதியில் அக்சய் சின் என்ற சீனப் பகுதி அமைந்துள்ளது. எனவே, இது சீனாவுக்கு முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.

கிழக்கு லடாக்கில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டில் நிலை பெற்றுள்ள ராணுவ வீரர்களுக்கு முக்கியமான பொருள்கள் டி.பி.ஓ. சாலை வழியாகதான் செல்கின்றன. அச்சாலையை பாதுகாத்து வரும் பள்ளத்தாக்கு, இந்திய ராணுவத்திற்கு எவ்வளவு முக்கியம் என்பதை சீனா புரிந்து கொண்டுள்ளது.

ஏற்கனவே வகுக்கப்பட்ட எல்லைப் பகுதிகளை விரிவாக்கம் செய்யும் நோக்கில் தாக்குதல் நடத்த சீனா திட்டமிட்டது. எனவே, அதற்கு கல்வான் பள்ளத்தாக்கை அந்நாடு தேர்வு செய்தது. ராணுவ உயர் அலுவலர்களுக்கான கூட்டம் கடந்த ஜூன் 6ஆம் தேதி நடைபெற்றது. இதில் எடுக்கப்பட்ட முடிவின்படி, இந்திய ராணுவ வீரர்கள் தங்களில் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் நிலை பெற்றனர்.

கர்னல் சந்தோஷ் பாபு தலைமையிலான ராணுவக் குழு, ஒப்பந்தத்தின் அடிப்படையில் வகுக்கப்பட்ட வழி காட்டுதலுக்கு உட்பட்டு, சீனா சார்பில் புதிதாக அமைக்கப்பட்ட கூடாரத்தை நீக்கத் தொடங்கினர்.

இதனைத் தொடர்ந்து, அங்கு குவிக்கப்பட்டிருந்த சீன ராணுவம் கடும் தாக்குதலை மேற்கொண்டது. தயாராக இருந்த அவர்கள், தங்களுக்கு அளிக்கப்பட்ட அறிவுறுத்தலின்படி வன்முறையைக் கையாண்டனர். ஆனால், இந்திய ராணுவமோ தொடக்க நாளிலிருந்தே பிரச்னையை பொறுமையாகக் கையாண்டுவந்தது.

உயிரிழப்பு நிகழும் அளவுக்கு வன்முறை நடைபெறுவதற்கு பல காரணிகள் இருந்தன. ஜம்மு - காஷ்மீர் பகுதியில் எல்லையை விரிவாக்கம் செய்யும் நோக்கில் சீனா செயல்பட்டதே முக்கியக் காரணமாக பார்க்கப்படுகிறது.

எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில் நாடோடிகளின் வாழ்க்கையை எளிதாக்கும் நோக்கிலும், கிராமப் பகுதிகளை எல்லை பகுதிகளோடு இணைக்கும் நோக்கிலும் சாலை, பாலம் போன்ற உள்கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட்டன. சீனா ஆத்திரமடைய இது மற்றொரு காரணமாக அமைந்தது. இந்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டுக்கு கீழ் ஜம்மு - காஷ்மீர் வந்தது சீனாவை எரிச்சலூட்டியது. இது கவனிக்கத்தக்கது.

மறுசீரமைப்பு சட்டம் அமலுக்கு வந்த பிறகு, ஜம்மு, காஷ்மீர், லடாக் ஆகிய பகுதிகளில் உள்ள கட்சிகளின் முக்கியத்துவம் குறைந்துள்ளது. லடாக்கில் உள்ள எல்லைப் பகுதி அடைவதற்கு எளிதானது அல்ல.

ஒவ்வொரு வாரமும், இந்திய, சீன நாடுகளுக்கிடையே ராணுவ அலுவலர்கள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடைபெறும். பல்வேறு ரீதியான தலையீடுகளைத் தவிர்க்கும் நோக்கிலும் தேசிய அளவிலான அரசியல் தலைவர்களின் ஒப்புதலுக்கு ஏற்பவும் இக்கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும்.

ஆனால் இம்முறை, அண்டை நாடுகளின் பகை உணர்வு விரிவடைந்துள்ளது. நேபாளம், இலங்கை, பாகிஸ்தான் போன்ற நாடுகள் சீனாவுக்கு ஆதரவாக உள்ள நிலையில், பதற்ற நிலையை அந்நாடு மேலும் அதிகரிக்க செய்துள்ளது.

சீன, பாகிஸ்தான் பொருளாதார வழித்தட திட்டம்

ஆசிய பிராந்தியத்தின் திருப்புமுனைத் திட்டமாக சீன, பாகிஸ்தான் பொருளாதார வழித்தட திட்டம் பார்க்கப்படுகிறது.

கஷ்கர், அரபிக்கடலை இணைக்கும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் கில்கிட் - பால்டிஸ்தான் பகுதி சீனப் பொருளாதாரத்தை ஊக்கப்படுத்த வல்லவை. சீன, பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத் திட்டத்தை ஆதரிப்பதன் மூலம் சர்வதேச அளவில் காஷ்மீருக்கான பாகிஸ்தான் ஆதரவு பெருகும்.

காலம் காலமாகவே, காஷ்மீர் பிரிவினைவாத இயக்கங்களுக்கு ஆதரவாக உள்ள பாகிஸ்தானின் பக்கம்தான் சீனா உள்ளது. நிதி முறைகேடுகளைக் குறைக்கும் நோக்கில் தொடங்கப்பட்ட அரசுகளுக்கிடையேயான சர்வதேச அமைப்பான நிதி செயல் திட்டக் குழு, பாகிஸ்தானை தடை செய்வதிலிருந்து சீனா தான் காத்து வருகிறது.

இந்திய - பாகிஸ்தான் நாடுகளுக்கிடையேயான எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியையும் இந்திய - சீன நாடுகளுக்கிடையே உள்ள எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டையும் தனித்துப் பார்க்க வேண்டும். ஆனால், அதற்கு சாத்தியக் கூறுகள் குறைவு. ஏனெனில், இந்த விவகாரத்தில் இந்தியாவை எதிர்ப்பதில் சீனாவும் பாகிஸ்தானும் ஒன்றிணைந்துள்ளன. விரோதம் இல்லாமல் போரை வெல்வது சீன விவகாரத்தில் நடைபெற உள்ளது. இல்லையெனில், சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருக்கும் இது பேரிடராக அமையும்.

இதையும் படிங்க: இந்திய வீரர்களிடம் ஆயுதங்கள் இருந்தன, ஆனால் பயன்படுத்தவில்லை - வெளியுறவுத் துறை அமைச்சர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.