ETV Bharat / bharat

நமக்குத் தேவை சிங்கப் பெண்கள் அல்ல... புரட்சிப் பெண்கள்!

நம் நாட்டில் பெண்களின் பாதுகாப்பிற்காக, பெண்களுக்குதான் வகுப்புகள் நடத்தப்படுகிறதே தவிர, ஆண்கள் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்று எங்கும் வகுப்புகள் நடத்தப்படுவது இல்லை. இதில்தான் அடங்கியிருக்கிறது பெண் சுதந்திரம் குறித்த வினாக்களுக்கான விடை.

Women day
Women day
author img

By

Published : Mar 8, 2020, 10:57 AM IST

Updated : Mar 8, 2020, 5:00 PM IST

ஆண்களுக்கும், ‘சில’ பெண்களுக்கும், பெண்கள் தினம் என்பது ‘சிங்கப்பெண்ணே’, ‘மாதரே மாதரே’ போன்ற பெண்ணியப் பாடல்களைத் தங்கள் ஸ்டேட்டஸ்களில் வைப்பதுடன் முடிந்துவிடுகிறது. ஆனால் உண்மையில் பெண்கள் தினம் கொண்டாடப்படுவதன் நோக்கம் அது அல்ல.

1909ஆம் ஆண்டு அதிகப்படியான வேலை நேரம், குறைவான ஊதியம், குறிப்பாக பெண்களுக்கு வாக்குரிமை மறுப்பு ஆகியவற்றை எதிர்த்து சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அமெரிக்க பெண்கள் வீதிக்கு வந்து போராடத் தொடங்கியதே இதன் ஆரம்பப் புள்ளி.

அதைத்தொடர்ந்து ஆண்களால் அரங்கேற்றப்பட்ட முதல் உலக போரினால் ஏற்பட்ட பாதிப்புகளில் பெரும் சிக்கல்களைச் சந்தித்தது பெண்கள்தான். அதை எதிர்த்து 1917ஆம் ஆண்டு மார்ச் 8ஆம் தேதி ரஷ்யாவில் பெண்கள் பெரும் போராட்டம் நடத்தினர். அதுவே அவர்கள் உரிமை பெறவும் பெண்களுக்கென தனி நாளைக் கொண்டாடவும் காரணமாக அமைந்தது.

Women day
File Pic: பெண்ணுரிமை வேண்டி நடைபெற்ற பேரணி

ஒவ்வொரு ஆண்டும் சமூக வலைதளங்களில் பெண்கள் தினம் கொண்டாடப்படும்போது எழும் ஒரே கேள்வி, “ஏன் ஆண்கள் தினம் பெண்கள் தினத்தைப் போல சிறப்பாகக் கொண்டாடப்படுவதில்லை” என்பதுதான்.

இதற்கான விடை மிகவும் எளிது. வரலாற்றில் எந்த காலத்திலும் ஆண்களின் உரிமைகள் மறுக்கப்பட்டதே இல்லை. வரலாற்றில் ஒரு இனமோ அல்லது ஒரு நாடோ மற்றவர்களுக்கு அடிமையாக இருந்துள்ளது. உதாரணத்திற்கு ஆப்பிரிக்க-அமெரிக்கர்கள், வெள்ளையர்களிடத்திலும் இந்தியா உள்ளிட்ட காலனி நாடுகள் இங்கிலாந்திடமும் அடிமையாக இருந்தன.

அப்படி அடிமையாக இருந்த நாட்டில்/ இனத்திலும் கூட ஆண்களுக்கே அதிக உரிமைகளும் சலுகைகளும் கிடைக்கும் வண்ணம் இருக்கும். ஏனென்றால் பெண் வழிச் சமூகமாக இருந்த இச்சமூகத்தை, ஆண்கள் தங்கள் பேராசை காரணமாக தங்கள் கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்து பெண்களை தங்கள் அடிமைகளாக வைத்துக்கொண்டனர்.

Women day
பெண்கள் தினம்

அமெரிக்காவும் இந்தியாவும்

அமெரிக்காவில் முதல் தேர்தல் நடத்தப்பட்டு சுமார் நூறு ஆண்டுகள் ஆனதற்கு பிறகே 1920ஆம் ஆண்டு பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கப்பட்டது. அதேபோல் ரஷ்யாவிலும் 1920களில்தான் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கப்பட்டது.

ஆனால், சுதந்திர இந்தியாவில் நடைபெற்ற முதல் தேர்தலிலேயே ஆண், பெண் என்று பேதமின்றி அனைவருக்கும் வாக்குரிமை அளிக்கப்பட்டது. அதேபோல், இரு நூறு ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் அமெரிக்காவில் ஒரு பெண் அதிபராக முடியவில்லை. ஆனால் இந்தியாவில் தேர்தல் நடைபெறத் தொடங்கி வெறும் 16 ஆண்டுகளில் ஒரு பெண்ணால் பிரதமராக முடிந்தது.

Women day
இந்தியாவின் முதல் பெண் பிரதமர் இந்திரா காந்தி

இதையெல்லாம் மிகவும் பெருமையான விஷயங்களாக நாம் சொல்லிக்கொள்ளலாம். ஆனால், அமெரிக்காவில் வீட்டிலிருக்கும் ஒரு சாதாரண பெண்ணுக்கு கிடைக்கும் உரிமைகளில் 10இல் ஒன்றுகூட இந்திய பெண்களுக்கு கிடைப்பதில்லை.

அங்கு பெண்களால் தங்களுக்கு பிடித்தாற்போல் வாழ்கையை அமைத்துக்கொள்ள முடியும். அங்கு பெண்களால் தங்களின் உடை, படிப்பு, வாழ்கைத் துணை என அனைத்தையும் சுயமாக தேர்வு செய்துகொள்ள முடியும்.

ஆனால், இந்திய பெண்களின் நிலையோ தலைகீழ். ஏனெனில், “பெண்கள் முதலில் தந்தையையும் பின் கணவனையும் அதன்பின் மகனையுமே சார்ந்திருக்க வேண்டும்” என்று சொன்ன மதத்தை பின்பற்றுபவர்களைக் கொண்ட நாடாயிற்றே இந்தியா. எனவே, பெண்கள் தங்கள் வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்கும் உரிமை மட்டுமல்ல அணியும் துணியை தேர்ந்தெடுக்கும் உரிமைகூட இங்கு மறுக்கப்படுகிறது.

Women day
பெண்கள் தினம்

இதையும் படிங்க: ‘பெண்கள் தினத்தன்று எனது ட்விட்டர் கணக்கு பெண்களுக்குதான்’ - மோடி

ஆணும் பெண்ணும்

“ஒரு சமூகத்தின் உண்மையான வளர்ச்சியை கணக்கிட வேண்டுமானால் அச்சமூகத்திலுள்ள பெண்களின் வளர்ச்சியை கணக்கிட வேண்டும்” என்றார் புரட்சியாளர் அம்பேத்கர். அதேபோல், “ஆண்களை நம்பியிருக்காமல் பெண்கள் தங்கள் சொந்த காலில் நிற்க வேண்டும்” என்றார் பெரியார்.

பெண்களின் சுதந்திரத்திற்கு கல்வி முக்கியம். ஏனென்றால் அதைச் சார்ந்தே அவர்களால் வேலைக்குச் செல்ல முடியும். அதன் மூலம் விரும்பியபடி வாழ்க்கையை அமைத்துக்கொள்ள முடியும்.

குழந்தைத் திருமணம் ஒழிக்கப்பட்டதற்கு பல காரணங்கள் உண்டு என்றாலும் அதில் முக்கியமானது, பெண்களை படிக்க வைக்க வேண்டும் என்பதுதான். கல்வி அறிவு பெற்றால் அவர்கள் யாரையும் சார்ந்திருக்காமல் சுதந்திரமாக வாழ முடியும்.

Women day
குழந்தை திருமணம்

ஆனால், இப்போது அதுதான் நடக்கிறதா? கொஞ்சம் நாம் எண்ணிப் பார்க்க வேண்டும். இங்கு பெண்களுக்கு கல்வி வழங்கப்படுகிறது. இங்கு பெண்களுக்கு கல்வி வழங்கப்படுகிறதுதான், ஆனால் அதன் மூலம் அவர்கள் சுதந்திரமாக வாழ அனுமதிக்கப்படுகிறார்களா என்ற கேள்விக்கு நிச்சயமாக இல்லை என்பதே உண்மை. பெரும்பாலான இந்திய பெண்களுக்கு கல்வியை முடித்த கையொடு (பல சமயங்களில் அதற்கு முன்னரே) பெற்றோர்களால் திருமணங்கள் நடத்திவைக்கப்படுகிறது.

தற்போது பெண்கள் கல்வி கற்பதன் மூலம் அவர்களின் திருமணம் செய்துகொள்ளும் வயதுதான் மாறியுள்ளதே தவிர, பெண்களுக்கு சுதந்திரம் கிடைத்ததாக தெரியவில்லை.

Women day
பெண்கள் தினம்

சமீபத்தில் நண்பர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தபோது, ”திருமணத்திற்கு பின் மனைவி சம்பாதித்தால், உங்களால் வீட்டை கவனித்துக்கொள்ள முடியுமா. முடியாதுதானே?” என்று தோழி ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு பெரும்பாலான ஆண்களின் பதில் இல்லை என்பதாகவே இருக்கும். கேள்வி கேட்ட அப்பெண்ணின் பதிலும் அதுவே.

பெண்கள் மட்டும் தங்களுக்கு அமையவுள்ள கணவர்களுக்காக தங்கள் படிப்பையும் வாழ்கையையும் தியாகம் செய்ய வேண்டும் என்றால், ஏன் ஆண்களை அதை செய்யக்கூடாது. இங்கு சில பெண்களுக்கு தங்களின் உரிமைகள் மறுக்கப்படுவது குறித்து கவலை இல்லை. அதுவே மற்ற பெண்கள் தங்கள் உரிமைகளை பெற தடையாகவுள்ளது.

Women day
நாட்டின் தேவை இந்த வெற்றிச் சிரிப்புகள்தான்; அடிமை சோகம் அல்ல!

பெண்கள் பாதுகாப்பு

இங்கு பெண்களின் பாதுகாப்பிற்கு பலரும் பல முயற்சிகளை எடுத்துவருகின்றனர். தமிழ்நாடு காவல் துறை சார்பில் காவலன் எஸ்ஓஎஸ் செயலியும் இதற்காக வெளியிடப்பட்டுள்ளது. நம் நாட்டில் பெண்களின் பாதுகாப்பிற்காக, பெண்களுக்குதான் வகுப்புகள் நடத்தப்படுகிறதே தவிர, ஆண்கள் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்று எங்கும் வகுப்புகள் நடத்தப்படுவது இல்லை. இதில்தான் அடங்கியிருக்கிறது வினாக்களுக்கான விடை.

இந்திய சமூகத்தில் ஆண்களால் தங்கள் விரும்பிய செயல்களை எளிதில் செய்ய முடிகிறது. அதற்காக அவர்கள் பெரிதும் சிரமப்படத்தேவையில்லை. ஆனால் பெண்கள் தங்களுக்கு மனதிற்கு பிடித்ததை செய்தாலே அவர்கள் இங்கு புரட்சிப் பெண்களாகவே பார்க்கபாடுகிறார்கள்.

Women day
பெண்கள் தினம்

எனவே, நம் சமூகத்திற்கு தேவை சிங்கப் பெண்கள் அல்ல, விரும்பியதை செய்யும் புரட்சிப் பெண்களே அதிகம் தேவை. ஒவ்வொரு பெண்ணும் அப்படி இருந்தால், ஆதிக்கமும் வேறுபாடுகளும் அற்ற சமூகம் எளிதில் அமையும்.

இதையும் படிங்க: மகளிர் கிரிக்கெட்டில் புரட்சியை ஏற்படுத்திய ஹர்மன்ப்ரீத் கவுர்

Last Updated : Mar 8, 2020, 5:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.