ETV Bharat / bharat

மத்திய அரசு விவசாயிகளுக்கு இதுவரை என்ன செய்தது? - ப.சிதம்பரம் கேள்வி

டெல்லி: மத்திய அரசால் விவசாயிகளுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை உறுதிப்படுத்த முடியும் என்றால், அதனை ஏன் இதுவரை செய்யவில்லை என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

ப.சிதம்பரம்
ப.சிதம்பரம்
author img

By

Published : Sep 21, 2020, 3:37 AM IST

வேளாண் துறை தொடர்பான வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளைபொருள்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா உள்ளிட்ட மூன்று மசோதாக்களும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டன.

இந்த மசோதாவிற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து பேசினர். இது விவசாயிகளுக்கு எதிரானது, பெரு முதலாளிகளுக்கு லாபம் அளிக்கக்கூடியது என்றும், குறைந்தபட்ச ஆதார விலையை ரத்து செய்யக்கூடியது என குற்றஞ்சாட்டி எதிர்க்கட்சி எம்பிக்கள் கோஷமிட்டு தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் வேளாண் துறை தொடர்பான மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் ட்வீட் செய்துள்ளார்.

அதில், " விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை கிடைக்க மத்திய அரசு உத்தரவாதம் அளிக்கும் என்று விவசாயத் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கூறுகிறார்.

தனியார் வர்த்தகம் இன்றும் நடைபெறுகிறது. விவசாயிகளுக்கு செலுத்தப்படும் விலை குறைந்தபட்ச ஆதார விலையை விட குறைவாகவே உள்ளது. அமைச்சர் கூறுவதை போல், மத்திய அரசால், விவசாயிகளுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை உறுதிப்படுத்த முடியும் என்றால், அதனை ஏன் இதுவரை செய்யவில்லை" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இதையும் படிங்க: நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட 3 வேளாண் மசோதாக்கள்...!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.