ETV Bharat / bharat

மோடியின் ஆட்சியில்தான் சீனா ஆக்கிரமிப்பு செய்தது - ராகுல் காந்தி

author img

By

Published : Jul 12, 2020, 7:24 PM IST

டெல்லி: மோடியின் ஆட்சியில்தான் இந்திய பகுதிகளை சீனா ஆக்கிரமிப்பு செய்தது என ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய, சீன ராணுவம் மோதிக் கொண்டதில் இந்திய ராணுவத்தை சேர்ந்த 20 வீரர்கள் கொல்லப்பட்டனர். தங்களது தரப்பிலும் உயிரிழப்பு நிகழ்ந்ததாக சீனா ஒப்பு கொண்டது. இவ்விவகாரத்தில், ராகுல் காந்தி பிரதமர் மோடியை தொடர்ந்து விமர்சித்துவருகிறார். இந்நிலையில், மோடியின் ஆட்சியில்தான் சீனா ஆக்கிரமிப்பு செய்ததாக ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

ஒரு செய்தியை மேற்கோள்காட்டி அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "மோடியின் ஆட்சியல் என்ன நடந்தது? இந்திய பகுதிகளை சீனா ஆக்கிரமிப்பு செய்தது" என பதிவிட்டுள்ளார். சீன ராணுவம் திரும்பப்பெறும் நடவடிக்கை குறித்து தவறான தகவல்களை அரசு பரப்பிவருவதாக அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எல்லை விவகாரம் குறித்து ஆலோசிக்க இரு நாடுகளை சேர்ந்த உயர்மட்ட அலுவலர்கள் ஜூலை 10 பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். கிழக்கு லடாக் பகுதியில் அமைதியை நிலைநாட்டும் வகையில் தமது படைகளை முழுவதுமாக திரும்பப்பெற இந்தியா, சீனா ஒப்புக்கொண்டன. இரு நாட்டு எல்லை விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பு மற்றும் ஆலோசனைக்கான செயல் திட்டத்தின் அடிப்படையில் பேச்சுவார்த்தை நடைபெற்றதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் செய்தி வெளியிட்டுள்ளது.

ஹாட் ஸ்பிரிங், கோக்ரா எல்லைப் பகுதிகளில் நடைபெற்றுவந்த ராணுவத்தைத் திரும்பப்பெறும் நடவடிக்கை, ஜூலை 9ஆம் தேதி நிறைவடைந்தது. கிட்டத்தட்ட 2 கி.மீ., தொலைவு சீனா தனது ராணுவத்தை பின்வாங்கியுள்ளதாக இந்திய தரப்பு தெரிவித்தது.

இதையும் படிங்க: கரோனாவுக்கு பிந்தைய காலத்தில் தெளிவான அரசியல் நிலைப்பாடு தேவை - ஜெய்சங்கர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.