இந்தியாவில் கரோனா பாதிப்பு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதில் கேரள அரசு சிறப்பாக செயல்பட்டுவருவதாக பல தரப்பினரும் பாராட்டிவருகின்றனர். மற்ற மாநிலங்களுக்கு முன்னதாகவே கேரளாவைக் கரோனா தாக்கினாலும், அம்மாநிலம் முறையான பரிசோதனை, தனிமைபடுத்தல் உள்ளிட்ட செயல்பாடுகளை மேற்கொண்டு நோய் தொற்றை வெகுவாக கட்டுக்குள் வைத்துள்ளது.
கேரளாவில் இதுவரை 457 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 338 பேர் குணமடைந்துள்ளனர். 4 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் கேரளாவில் கரோனா பாதிக்கப்பட்டவர்களின் விவரங்களை அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்பிரிங்க்ளர் என்ற மார்கெட்டிங் நிறுவனத்திடம் ஒப்பந்தம் மேற்கொண்டு அம்மாநில அரசு பகிர்ந்துள்ளது.
இந்த நடவடிக்கைக்கு கேரளா எதிர்கட்சிகள் பெரும் எதிர்ப்பை தெரிவித்துள்ளன. வைரஸ் பாதித்தவர்களின் அடையாளத்தை வெளியே தெரிவிக்கக் கூடாது என்ற நிலையில் தனியார் மார்கெட்டிங் நிறுவனத்திடம் விவரங்களை பகிர்ந்தது ஏன் எனவும் அதனால் அரசு கண்ட பயன் என்ன எனவும் கேரளாவின் எதிர்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா முதலமைச்சர் பினராயி விஜயனிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த விவகாரம் குறித்து கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடுக்கப்பட்டு விசாரணை நடைபெற்றுவருகிறது.
இதையும் படிங்க: மாநில அரசுகள் சிறப்பாக செயல்பட்டன - பிரதமர் மோடி