ETV Bharat / bharat

இயற்கை வேளாண்மை என்ற இலக்கை நோக்கி பயணிக்கும் டார்ஜிலிங் தேயிலை விவசாயிகள்

நாடு முழுவதும் 27 பூச்சிக்கொல்லி மருந்துகளைத் தடைசெய்ய அரசு திட்டமிட்டுள்ள நிலையில், கடந்த சில ஆண்டுகளாகவே டார்ஜிலிங் தேயிலை விவசாயிகள் இயற்கை வேளாண்மையை ஆர்வத்துடன் மேற்கொண்டுவருகின்றனர். இது குறித்த சிறப்பு செய்தித் தொகுப்பு இதோ...

Organic
Organic
author img

By

Published : Jun 18, 2020, 1:13 PM IST

மேற்கு வங்க மாநிலத்தின் டார்ஜிலிங் பகுதியில் முக்கியத் தொழிலாகக் கருதப்படும் தேயிலை விவசாயம் கடந்த சில ஆண்டுகளாக முக்கிய மாற்றத்தைக் கண்டுவருகிறது. பூச்சிக்கொல்லியைத் தவிர்த்து இயற்கை வேளாண்மைக்குத் திரும்புவோம் என்பதே இப்பகுதி விவசாயிகளின் புதிய முழக்கமாக உள்ளது.

தேயிலை விவசாயம் பொதுவாகச் சந்திக்கும் இரு பெரும் பிரச்னை பூச்சிகள் மற்றும் எதிர்பாராத கடும் மழை. இவை இரண்டும் தேயிலையில் மோசமான பாதிப்பை ஏற்படுத்துபவை.

"தேயிலைச் செடிகள் இரு வகையான பூச்சி பாதிப்பிற்கு ஆளாகின்றன. ஒன்று மைட்ஸ் வகைப் பூச்சிகள், மற்றொன்று பூஞ்சை வகைப் பூச்சிகள். இவற்றை எதிர்கொள்ள தனித்தனியே மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன என தேயிலைத் தோட்ட மேலாளர் பாஸ்கர் சக்ரவர்த்தி தெரிவிக்கிறார்.

இன்றைய காலத்தில் விவசாயிகளுக்கு போதிய விழிப்புணர்வு உள்ளது. எனவே, பூச்சிக் கொல்லி, ரசாயனங்களைப் பயன்படுத்துவதற்கு முன்பாக அவர்கள் நிபுணர்களை கலந்தாலோசிக்கின்றனர். நாடு முழுவதும் உள்ள தேயிலை விவசாயிகள் பூச்சிக்கொல்லி பயன்படுத்தும் வழிமுறைகளை மத்திய வர்த்தக அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் இந்தியத் தேயிலை வாரியம் வகுத்து, முறையே கண்காணித்துவருகிறது. வடகிழக்கு மாநிலங்கள், தென் மாநிலங்கள் என நாட்டின் அனைத்து தேயிலை உற்பத்தி அமைப்புகளும் இந்தியத் தேயிலை வாரியத்துடன் ஒருங்கிணைந்தே செயல்பட்டுவருகிறது.

"தேயிலை வாரியத்தின் வழிகாட்டுதலின்படி பூச்சிக்கொல்லி, ரசயனங்களைப் பயன்படுத்திவருகிறோம். எனவே, தேயிலையின் தரத்திலும் பாதுகாப்பிலும் எந்தவித சமரசமும் மேற்கொள்வதில்லை. டார்ஜிலிங் தேயிலையின் தரத்தின் காரணமாகத் தான் மக்களிடம் மாபெரும் வரவேற்பு எங்களுக்கு உள்ளது என தேயிலை உற்பத்தியாளர் கூட்டமைப்பின் தலைமை ஆலோசகர் அம்ரிதன்ஷு சக்ரவர்த்தி கூறுகிறார்.

இந்த தேயிலை அமைப்புகள் சர்வதேச அமைப்புகளுடன் இனைந்து முக்கிய ஆலோசனைகளை மேற்கொண்டு, அவற்றை நடைமுறைப்படுத்திவருகின்றன. முக்கியமாக இயற்கை விவசாயம் மூலம் தேயிலை உற்பத்தி சில ஆண்டுகளாகவே டார்ஜிலிங் பகுதியில் ஊக்குவிக்கப்படுகிறது. இந்த இயற்கைத் தேயிலை அமெரிக்கா, ஜெர்மனி, ஜப்பான், ஸ்விட்சர்லாந்து ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

"வெளிநாடுகளில் இயற்கை தேயிலைக்கான வரவேற்பு அமோகமாக உள்ளது. ரசாயனமற்ற 100% இயற்கைத் தேயிலை உற்பத்தி என்ற இலக்கே எங்களது நோக்கம் என்கிறார் டார்ஜிலிங் தேயிலை கூட்டமைப்பின் தலைவர் பினோத் மோகன்.

பனிக் காலத்தைத் தவிர மற்ற காலங்களில் பல ரகங்களிலான தேயிலை உற்பத்தியை டார்ஜிலிங் பகுதி விவசாயிகள் மேற்கொள்கின்றனர். பனிகாலத்திற்கு முன்னதாகவே அனைத்து தேயிலையும் பறிக்கப்பட்டு, அவை ஏற்றுமதிக்கு தயாராகிவிடும். இயற்கை முறையில் களை மற்றும் பூச்சிகளை கட்டுப்படுத்த மாட்டுச் சாணம், வேப்பெண்ணை, வேப்ப இலை மூலம் தயாரிக்கும் இயற்கை மருந்துகளே பயன்படுத்தப்படுகின்றன.

இதையும் படிங்க: பூச்சிக்கொல்லித் தடையால் கலக்கமடைந்துள்ள மாம்பழ சாகுபடி விவசாயிக
ள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.