இதுகுறித்து மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம், "இந்தியா முழுவதும் அதிகபட்சமாக பாம்பினால் கடிபடுபவர்கள் எண்ணிக்கையில் மேற்கு வங்கம், ஒடிசா, தமிழ்நாடு முதல் மூன்று இடங்களில் உள்ளது.
எனவே அந்தந்த மாநில சுகாதாரத் துறையினர் அத்தியாவசிய மருந்துகளின் பட்டியலில் பாம்புக்கடி எதிர்ப்பு மருத்து (Anti Snake Venom Serum (ASVS)) கூடுதலாக சேர்க்க வேண்டும். பொதுவாக பாம்புக் கடி சம்வங்கள் வெப்பமண்டல மற்றும் துணை வெப்பமண்டல பகுதியில் அமைந்துள்ள கிராமப் புறங்களில் நடைபெறுகிறது.
குறிப்பாக விவசாயிகள், தோட்டத் தொழிலாளர்கள், கால்நடை வளர்ப்போர், பொதுமக்கள் பாம்புக் கடிக்கு ஆளாகின்றனர். அதில் பெரும்பாலான உயிரிழப்புகளும் ஏற்படுகிறது. மேலும் பல்வேறு பாம்பு கடி சம்பவங்கள் மற்றும் உயிரிழப்புகள் அரசுக்கு தெரிவிக்கப்படாமலே உள்ளது.
இதுகுறித்து சுகாதார மேலாண்மை தகவல் அமைப்பின் Health Management Information System (HMIS) கூற்றுப்படி, 2017-18ஆம் ஆண்டில் பாம்புக் கடியால் 2 லட்சத்து 492 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கை 2018-19 ஆம் ஆண்டில் 2 லட்சத்து 30 ஆயிரத்து 950ஆக அதிகரித்துள்ளது.
புள்ளிவிவரப்படி 2017-18 ஆம் ஆண்டில் மேற்கு வங்கத்தில் 1 லட்சம் பேருக்கு 37 பேர் பாம்புக் கடியால் பாதிக்கப்படுவதாக கணிக்கிடப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் 36 பேரும், கோவாவில் 35 பேரும், மகாராஷ்டிராவில் 33 பேரும், ஆந்திராவில் 32 பேரும், ஒடிசாவில் 28 பேரும் பாதிக்கப்படுகின்றனர். அவற்றில் 1 லட்சம் பேருக்கு மேற்கு வங்கத்தில் 2 பேரும், ஒடிசாவில் 2 பேரும், தமிழ்நாட்டில் ஒருவரும் உயிரிழக்கின்றனர் என தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: 'டாக்டர் பாம்பு கடிச்சிட்டு...எந்த பாம்பு?..' இந்தா இருக்கே;- கடித்த பாம்புடன் மருத்துவமனைக்கு வந்த பெண்!