ETV Bharat / bharat

செங்கலாக பயன்படுத்தப்படும் நெகிழி: மேற்கு வங்க அரசு அலுவலரின் மகத்தான செயல் - West Bengal Plastic Change

கொல்கத்தா: நெகிழியை ஒழிக்கும்வகையில்  பிஸ்னுபூரின் துணை கோட்ட அலுவலர் தன் மகனுடன் சேர்ந்து ஒரு மகத்தான பணியை ஆற்றிவருகிறார்.

West Bengal Government Officers turn plastic Bottles into Bricks

author img

By

Published : Jan 30, 2020, 4:40 PM IST

Updated : Jan 30, 2020, 4:58 PM IST

நெகிழியால் செய்யப்பட்ட செங்கல்களா? அதுவும் ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்படும் நெகிழியால் ஆனதா? மேற்கு வங்கம் பிஸ்னுபூரில் உள்ள உள்ளாட்சி அமைப்புகள் இதைத்தான் செய்கின்றன. இது மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

பங்குரா மாவட்டம் பிஸ்னுபூரின் துணை கோட்ட அலுவலர்தான் இந்த முயற்சிக்கு வடிவம் கொடுத்துள்ளார். பயன்படுத்தப்பட்ட மறுசுழற்சிக்குள்ளாக்க முடியாத நெகிழிகளைப் பயன்படுத்தி செங்கல்களைச் செய்யலாம் என்ற யோசனையை மானஸ் மண்டல் என்ற அலுவலர்தான் கொடுத்துள்ளார்.

செங்களாக மாறிய ப்ளாஸ்டிகள்
செங்களாக மாறிய நெகிழிகள்

இது குறித்து பிஸ்னுபூரின் துணை கோட்ட அலுவலர் மானஸ் மண்டல் கூறுகையில், "நெகிழி பாட்டில்கள் செயல்முறைக்கு உட்படுத்தப்பட்ட பின் திடமான உருவம் கிடைக்கிறது. அதிலிருந்து செங்கல்கள் செய்யப்படுகிறது. வீட்டிலிருந்த பழைய நெகிழி பாட்டில்கள்தான் பயன்படுத்தப்படுகிறது. நெகிழியிலிருந்து பைகள் தயாரிக்கப்படுகின்றன" என்றார். இந்தப் பணியில் மண்டல் தன் மகனை ஈடுபடுத்துகிறார். மண்டல் மற்றவர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்திவருகிறார்.

இது குறித்து மண்டலின் மகன், "தன் அலுவலக வளாகத்தை அழகுப்படுத்த சுற்றுச்சூழலுக்கு உகந்த இந்தச் செங்கல்களை மண்டல் பயன்படுத்தப்படுகிறார். அலுவலகத்தின் எல்லைகளை அளவிடும்போது மரங்கள் கணக்கிடப்படுகிறது" என்றார்.

துணை கோட்ட அலுவலகத்தின் இருக்கைகளை வரிசைப்படுத்துவதற்கும் சுற்றுச்சூழலுக்கு உகந்த இந்தச் செங்கல்கள் பயன்படுகிறது. பயன்படுத்தப்பட்ட பாட்டில்களிலிருந்தே செங்கல்கள் தயாரிக்கப்படுகின்றன.

அரசு அலுவலரின் மகத்தான செயல்

மறு சுழற்சிக்குள்படுத்த முடியாத நெகிழிகள் பைகளில் அடைக்கப்படுகின்றன. இவையே, செங்கல்களாகப் பயன்படுத்தப்படுகின்றன. கட்டடம் கட்டுவதற்காக இந்தச் செங்கல்கள் பயன்படுகின்றன. சுற்றுச்சூழலுக்கு உகந்த இந்தச் செங்கல்கள் குறித்து மாணவர்களிடையே பிஸ்னுபூர் துணை கோட்ட நிர்வாகம் விழிப்புணர்வு ஏற்படுத்திவருகிறது.

இதையும் படிங்க: மேற்கு வங்கத்தின் தனி ஒருவன்!

Intro:Body:

Jan 30 plastic story: VO, Gfx

Conclusion:
Last Updated : Jan 30, 2020, 4:58 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.