ETV Bharat / bharat

பனிப்போரை முடிவுக்கு கொண்டுவந்த தொலைபேசி உரையாடல்!

கொல்கத்தா: மேற்குவங்கத்தில் கோவிட்-19 பரவல் தடுப்பு ஊரடங்கு அமல்படுத்தல் தொடர்பில் முதலமைச்சர் மம்தா பானர்ஜி, ஆளுநர் ஜகதீப் தங்கர் இடையே எழுந்த முரண்பாடு தொலைபேசி உரையாடலைத் தொடர்ந்து தற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ளது.

west bengal Goveonr now satisfied with  govt response on covit-19
பனிப்போரை முடிவுக்கு கொண்டு வந்த தொலைப்பேசி உரையாடல்!
author img

By

Published : Apr 17, 2020, 3:09 PM IST

மேற்கு வங்கத்தில் கரோனா வைரஸ் தொற்றுநோய் பரவல் தடுப்பு ஊரடங்கை வெற்றிகரமாகக் கடைப்பிடிக்க மத்திய பாதுகாப்புப் படைகளை உதவிக்கு அழைக்க வேண்டும் என ஆளுநர் ஜகதீப் தங்கர் கூறியதை அடுத்து தொடங்கிய முரணை முதலமைச்சர் மம்தா பானர்ஜி, ஆளுநர் இடையேயான தொலைபேசி உரையாடல் தற்காலிகமாக முடிவிற்கு கொண்டுவந்துள்ளது.

இதனையடுத்து இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ள அவர், “நேற்று தொலைபேசி மூலமாக அழைத்த முதலமைச்சர் மம்தாவை பாராட்டுகிறேன். ஊரடங்கு அமல்படுத்தல் தொடர்பில் இருவரும் குறிப்புகள் மூலமாக பேசினோம். இருபக்கமும் புதுப்பிப்புகள் இருந்தன. ஊரடங்கு, சமூக இடைவெளியை 100 விழுக்காடு கடைப்பிடிக்கப்படுவதாக அறிய முடிகிறது.

west bengal Goveonr now satisfied with  govt response on covit-19
பனிப்போரை முடிவுக்கு கொண்டுவந்த தொலைபேசி உரையாடல்!

தணிக்கைக் குழுவின் பரிந்துரைக்கப்பட்ட மதிப்பாய்வை முன்வைத்து சரியான நேரத்தில் உண்மையான தரவுகள் பார்வைக்குக் கொண்டுவரப்பட்டன. கரோனாவுக்கு எதிரான வீரர்களின் பாதுகாப்பில் கவனம் செலுத்துங்கள். தவறியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார்.

மேற்குவங்க மாநிலத்தில் கோவிட்-19 பெருந்தொற்று நோய் கண்டறிய போதுமான சோதனைகள் மேற்கொள்ளப்பட்டவில்லை என முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையிலான அரசாங்கத்திற்கு எதிராக எதிர்க்கட்சியான பாஜக குற்றஞ்சாட்டிவருகிறது.

இதையும் படிங்க : முதியவருக்கு முககவசம் அணிய கற்றுக்கொடுத்த காவலர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.