இந்தியா முழுவதும் ஒன்பது மாநிலங்களில் உள்ள 72 தொகுதிகளுக்கு இன்று நான்காம் கட்ட வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது.
இதற்கிடையே, மேற்கு வங்க மாநிலத்தின் அசன்சோல் தொகுதியில் உள்ள 125 - 129 ஆகிய வாக்குச்சாவடிகளில் திரிணாமுல் காங்கிரஸ், பாஜக, கம்யூனிஸ்ட் ஆகிய மூன்று கட்சிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதல் கைகலப்பாக மாறியது. இதனைத் தடுக்க வந்த காவல் துறையினருக்கும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இதையடுத்து, நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர அக்கட்சியின் தொண்டர்கள் மீது காவல் துறையினர் தடியடி நடத்தினர். அப்போது, அங்கிருந்த பெண்கள் உள்ளிட்டவர்கள் உருட்டுக் கட்டையுடன் காவல் துறையினர் மீது எதிர்த்தாக்குதல் நடத்தியதால் அப்பகுதி போர்க்களம் போல் காட்சியளித்தது. இந்த விவகாரம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.