கொல்கத்தாவில் உள்ள ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பிரபல பொருளாதார வல்லுநர் அமர்த்தியா சென், மேற்கு வங்கத்தில் ‘மா துர்கா’ என்ற முழக்கத்தை தான் அவர் கேட்டிருப்பதாகவும், ‘ஜெய் ஸ்ரீராம்’ என ஒரு முழக்கமே இங்கு இல்லை என்றும் கூறியிருந்தார். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில், அமர்த்தியா சென்னின் கருத்து குறித்து பேசிய மேற்கு வங்க பாஜக தலைவர் திலிப் கோஷ், ‘அமர்த்தியா சென் அநேகமாக மேற்கு வங்கத்தைப் பற்றி அறிந்திருக்க மாட்டார் என்று நினைக்கிறன். அவருக்கு பெங்காலி அல்லது இந்திய கலாசாரம் பற்றி ஏதாவது தெரியுமா?’ என கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், மேற்கு வங்கத்தின் கிராமங்களில் ஒலித்துக்கொண்டிருந்த ‘ஜெய் ஸ்ரீராம்’ முழக்கம் தற்போது மாநிலம் முழுவதும் கேட்பதாகவும் திலிப் கோஷ் தெரிவித்துள்ளார்.