ETV Bharat / bharat

மத்திய குழுவுக்கு மேற்கு வங்க அரசு முழு ஒத்துழைப்பை வழங்கும்! - மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு மேற்கு வங்க அரசு கடிதம் எழுதியுள்ளது

கொல்கத்தா : ஊரடங்கு தொடர்பாக மத்திய அரசு விதித்துள்ள அனைத்து உத்தரவுகளுக்கும் கட்டுப்பட்டு கள நிலவரத்தை ஆராய வருகைத் தரும் மத்தியக் குழுவுக்கு முழு ஒத்துழைப்பை வழங்குவதாக மேற்கு வங்கம் அரசு உறுதி அளித்துள்ளது.

West Bengal assures cooperation to central teams; writes letter to MHA
மத்திய குழுவுக்கு மேற்கு வங்க அரசு முழு ஒத்துழைப்பை வழங்கும்!
author img

By

Published : Apr 22, 2020, 10:52 AM IST

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு மத்திய அரசால் பிறப்பிக்கப்பட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கின் களநிலவரத்தை ஆராயவும், மக்களின் பிரச்னைகளை தீர்க்க பரிந்துரைகளை வழங்கவும் மத்திய அரசு அபூர்வா சந்திரா தலைமையில் குழு ஒன்றை அமைத்து இருக்கிறது. இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களில் இந்தக் குழு ஆய்வு செய்ய உள்ளது.

இதன் ஒரு பகுதியாக, மத்திய அரசின் குழுவானது ஊரடங்கு நிலைமைகளை ஆய்வு செய்வதற்காக மேற்கு வங்கம் சென்றது. மேற்கு வங்க சுற்றுப்பயணத்திற்கு முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையிலான அரசாங்கம் எவ்வித ஒத்துழைப்பும் அளிக்கவில்லை என இந்தக் குழுவினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இக்குழுக்கள் ஆய்வுக்காகவும், அனுமதிக்காகவும் காத்திருந்தன. ஆனால், மாநில அரசின் தரப்பில் இருந்து எவ்வித ஒத்துழைப்பும் வழங்கப்படவில்லை என உள்துறை அமைச்சக அலுவலர் புன்யாசலிலா ஸ்ரீவாஸ்தவா குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதனையடுத்து, நேற்று (ஏப்ரல் 21) மத்திய உள்துறை அமைச்சகம் மேற்கு வங்க அரசிடம் இது தொடர்பாக விளக்கம் கோரியது. இதற்கு பதிலளிக்கும் விதமாக மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லாவுக்கு எழுதிய மேற்கு வங்க மாநில தலைமைச் செயலாளர் ராஜீவா சின்ஹா கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அதில், ‘ஊரடங்கு நிலவரத்தை ஆராய வந்திருக்கும் மத்திய குழுவின் ஆய்வு அணிகளுக்கு (ஐ.எம்.சி.டி) மாநில அரசு எந்த ஒத்துழைப்பும் வழங்கவில்லை என்பது ஒரு உண்மை அல்ல.

கோவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்த மத்திய அரசின் அனைத்து உத்தரவுகளுக்கும் கட்டுப்படுவதாக மேற்கு வங்க அரசு அரசாங்கம் உறுதியளித்துள்ளதுடன், மாநிலத்தின் கள நிலைமையை மதிப்பிடும் மத்திய குழுவின் அணிகளுக்கு முழு ஒத்துழைப்பையும் உறுதி செய்துள்ளது.

பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட மத்திய அரசின் உத்தரவுகளையும், மாண்புமிகு உச்சநீதிமன்றத்தின் அனைத்து உத்தரவுகளையும் செயல்படுத்தப்பட்டு வருகிறதென எனது மிக உயர்ந்த உத்தரவாதங்களை தெரிவித்துக்கொள்கிறேன்", என குறிப்பிட்டுள்ளார்.

மேற்கு வங்கத்தில் கரோனா வைரஸ் தொற்றுநோய் பரவல் தடுப்பு ஊரடங்கை வெற்றிகரமாகக் கடைபிடிக்கவில்லை என்றும் அதனை சீர்ப்படுத்த மத்திய பாதுகாப்புப் படைகளை உதவிக்கு அழைக்க வேண்டும் என மேற்கு வங்க ஆளுநர் ஜகதீப் தங்கர் கூறியிருந்தது கவனிக்கத்தக்கதாகும்.

West Bengal assures cooperation to central teams; writes letter to MHA
உள்துறை அமைச்சகத்துக்கு மேற்கு வங்க அரசு எழுதியுள்ள கடிதம்

மேற்கு வங்க மாநிலத்தில் கோவிட்-19 பெருந்தொற்று நோய் கண்டறிய போதுமான சோதனைகள் மேற்கொள்ளப்பட்டவில்லை, ஊரடங்கை மாநில அரசு கடைபிடிக்கவில்லை என முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையிலான அரசாங்கத்திற்கு எதிராக எதிர்க்கட்சியான பாஜக குற்றஞ்சாட்டிவருகிறது.

இதையும் படிங்க : ஜேஎன்யு முன்னாள் மாணவர் உமர் காலித் உள்பட மூவர் மீது பாய்ந்த உபா சட்டம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.