அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள கரீம்கஞ்ச் பகுதியில் உள்ள எல்லை வழியாக இந்தியாவிற்குள் நுழைய முயன்ற 20 வங்கதேசத்தினரை பாதுகாப்புப் படையினர் கைது செய்தனர். பின்னர் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் எந்தவித ஆவணங்களும் இன்றி இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்றது தெரியவந்தது.
இதையடுத்து, அவர்களை எச்சரித்த பாதுகாப்புப் படையினர் கரீம்கஞ்ச் சோதனைச்சாவடி வழியாக சொந்த நாட்டிற்கு அனுப்பிவைத்தனர்.