ஜம்மு - காஷ்மீர் மாநிலத்திற்கு அளிக்கப்பட்டுவந்த சிறப்புத் தகுதியை நீக்குவதற்காக நாடாளுமன்ற இரு அவைகளிலும் ஜம்மு - காஷ்மீர் மறு சீரமைப்பு மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா மக்களவையில் நிறைவேறியபோது, 20 நிமிட உரை ஒன்றை லடாக் மக்களவை உறுப்பினர் ஜாம்யாங் சேரிங் நமங்யால் நிகழ்த்தினார். பலர் பாராட்டிய இந்த உரையால் ஒரே நாளில் பிரபலமானார் ஜாம்யாங் சேரிங் நமங்யால்.
இந்நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த லடாக் மக்களவை உறுப்பினர், "லடாக்கை தனி யூனியன் பிரதேசமாக அறிவித்த பிரதமர் மோடி, உள் துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் விழா ஒன்றை நடத்தவுள்ளோம்.
அதற்காகத்தான் மோடி, அமித் ஷா ஆகியோரின் தேதிக்காக காத்துக் கொண்டிருக்கிறோம். லடாக்கை தனி யூனியன் பிரதேசமாக அறிவிப்பதற்கு 70 ஆண்டுகள் காத்துக்கொண்டிருந்தோம்" என்றார்.