இந்திய-சீன எல்லை லடாக்கில் எந்தவொரு சூழ்நிலையையும் சமாளிக்கவும், எதிரிகளுக்குப் பதிலடி கொடுக்கவும் இந்திய விமானப்படை (ஐஏஎஃப்) விமானிகள் தயாராக உள்ளதாகத் தெரிவித்தனர்.
இதுகுறித்து விமானப்படை உயர் அலுவலர் ஹர்பரப் சிங் கூறுகையில், சீனாவுடனான பதற்றத்திற்கு மத்தியில் இந்திய விமானப்படை எதற்கும் தயாராக உள்ளது.
போர் விமானங்களான சி -17 குளோப்மாஸ்டர், இலிஷின்-76, அன்டோனியோ-32, அப்பாச்சி தாக்குதல் மற்றும் சினூக் ஹெவி-லிப்ட் சாப்பர்கள் உள்ளிட்ட அனைத்தும் தளத்தில் தயாராக உள்ளன. மேலும் எல்லையில் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளோம்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: லடாக் ஸ்கவுட் படைபிரிவில் புதிதாக இணைந்த 131 இளம் வீரர்கள்!