ETV Bharat / bharat

'சிதம்பரம் கைது நடவடிக்கையை சட்டப்படி எதிர்கொள்வோம்' - inx case latest update

டெல்லி: ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் மீது சிபிஐ மேற்கொண்ட கைது நடவடிக்கையை சட்டப்படி எதிர்கொள்வோம் என்று கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

Karthi chidambaram
author img

By

Published : Aug 22, 2019, 10:19 AM IST

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் மத்திய முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரத்தின் முன்பிணை மனு நேற்று அவசர வழக்காக உச்ச நீதிமன்றம் விசாரிக்க மறுத்துவிட்டது.

இதனையடுத்து ப. சிதம்பரத்தை மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) வலைவீசி தேடிவந்த நிலையில், அவர் நேற்று டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசியபோது, தனக்கும் தன் குடும்பத்தினருக்கும் ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் எவ்வித சம்பந்தமும் இல்லை என திட்டவட்டமாக மறுத்தார். அதன்பின் வீடு திரும்பிய அவரை சிபிஐ அலுவலர்கள் அங்கேயே வைத்து கைது செய்தனர்.

பின் டெல்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில் காவலில் வைக்கப்பட்ட ப. சிதம்பரம், இன்று மதியம் வரை அங்கேயே இருப்பார் என்பதால் அவருக்கான மருத்துவ உதவிகள் கிடைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் அவர் இன்று டெல்லி, ரோஸ் அவன்யூவில் உள்ள சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் ப. சிதம்பரத்தின் மகனும் சிவகங்கை மக்களவை உறுப்பினருமான கார்த்தி சிதம்பரம் டெல்லி செல்வதற்காக இன்று காலை சென்னை விமான நிலையம் வந்தார். அங்கு அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "என் தந்தையின் மீது எடுக்கப்பட்டிருக்கும் இந்த கைது நடவடிக்கை பழிவாங்கும் நோக்கிலும் காங்கிரஸ் கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் வகையிலும் பின்னப்பட்ட சதியாகும். நாங்கள் நிச்சயம் இதனை எதிர்த்துப் போராடுவோம்.

மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா 2010ஆம் ஆண்டில் கைது செய்யப்பட்டதின் வெளிப்பாடுதான் ப. சிதம்பரத்தின் கைதா? என்ற கேள்விக்கு, "அதைப்பற்றியெல்லாம் நான் கூற விரும்பவில்லை. தற்போது இந்த வழக்கிற்கு தேவையான சம்பந்தப்பட்ட விஷயங்களைக் கூற நினைக்கிறேன். மேலும் நாங்கள் இந்த வழக்கை நாளை உச்ச நீதிமன்றத்தில் சட்டப்பூர்வமாக சந்திப்போம்" எனத் தெரிவித்தார்.

Intro:Body:

Karthi chidambaram Pressmeet In chennai Airport

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.