ETV Bharat / bharat

புதுச்சேரியில் கூட்டணி குறித்து தலைவர்கள் முடிவை கேட்போம் - முதலமைச்சர் நாராயணசாமி - Puducherry Chief Minister Narayanasamy

புதுச்சேரியில் கூட்டணி குறித்து தலைவர்கள் முடிவை கேட்போம் என அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி சென்னையில் தெரிவித்துள்ளார்.

Pondicherry  Chief Minister Narayanasamy
Pondicherry Chief Minister Narayanasamy
author img

By

Published : Jan 20, 2021, 7:24 PM IST

சென்னை: டெல்லி செல்வதற்காக சென்னை விமான நிலையத்திற்கு வந்த புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”கிரண்பேடியின் அராஜக போக்கை பற்றி புகார் செய்ய குடியரசு தலைவர், உள்துறை அமைச்சரிடம் நேரம் கேட்டுள்ளோம். துறை கோப்புகளை பற்றி விவாதிக்க அமைச்சர் ஒருவருக்கே நேரம் ஒதுக்க மறுக்கிறார் துணைநிலை ஆளுநர்.

மக்கள் நல திட்டங்கள் செய்யவிடாமல் தடுப்பதை கண்டித்து பல போராட்டங்களை நடத்தி வருகிறோம். கடமையைச் செய்ய தவறியதால் கிரண் பேடியை திரும்ப பெற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி சந்திக்க உள்ளோம்.

புதுச்சேரியில் கூட்டணி குறித்து தலைவர்கள் முடிவை கேட்போம்

புதுச்சேரியில் காங்கிரஸ், திமுக கூட்டணி உள்ளது. தொடர்ந்து இந்த கூட்டணி இருந்து வருகிறது. தேர்தல் நேரத்தில் கூட்டணி குறித்து காங்கிரஸ் தலைவர்கள் சோனியாகாந்தி, ராகுல்காந்தி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் முடிவு செய்வார்கள். கூட்டணி குறித்து தலைவர்கள் என்ன சொல்கிறார்களோ அதை கேட்போம்” என்றார்.

இதையும் படிங்க: குடியரசு தினத்தை முன்னிட்டு மாணவர்களுடன் உரையாடவுள்ள கிரண்பேடி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.