பாதுகாப்பு கண்காட்சி
நாட்டின் பாதுகாப்புத் துறை கண்காட்சி 2020, உத்தரப் பிரதேச மாநிலத்தின் லக்னோவில் தொடங்கி நடந்துவருகிறது. கண்காட்சியை தொடங்கிவைத்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவிலிருந்து 35 ஆயிரம் கோடி அளவிற்கு ராணுவ ஆயுதங்கள் ஏற்றுமதி செய்யப்படும்” என்றார். மேலும், “இந்தியா உள்ளிட்ட பெரிய நாடுகள் ராணுவ உபகரணங்கள் மற்றும் ஆயுத உற்பத்தியில் வெளிநாட்டை நம்பியிருத்தல் சரியாகாது. ஆகவே ராணுவ ஆயுதங்களை உள்நாட்டில் (மேக் இன் இந்தியா) தயாரிப்போம்” என்றார்.
பிரத்யேக பேட்டி
தற்போது இந்தியா ஆண்டுக்கு 18-20 பில்லியன் அமெரிக்க டாலர் வரை ராணுவத் தளவாடங்களை இறக்குமதி செய்துவருகிறது. இதுதொடர்ந்தால் அடுத்த சில ஆண்டுகளில் ராணுவ தளவாடங்கள் இறக்குமதியில் உலகின் மிகப்பெரிய நாடுகளுள் ஒன்றாக இந்தியா திகழும் என்று ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி மைய (SIPRI-Stockholm International Peace Research Centre) தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் தலைவர் ஜி. சதீஷ் ரெட்டி இந்த நிலையில் லக்னோ பாதுகாப்பு கண்காட்சி 2020இல் கலந்துகொண்ட பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் தலைவர் ஜி. சதீஷ் ரெட்டி, ஈடிவி பாரத் செய்தியாளர் கிருஷ்ணானந்த் திரிபாதிக்கு பிரத்யேகமாகப் பேட்டியளித்தார். நமது செய்தியாளர் கிருஷ்ணானந்த் திரிபாதி கேட்ட கேள்விக்கு பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் தலைவர் ஜி. சதீஷ் ரெட்டி அளித்த பதில் வருமாறு:-பாதுகாப்புத் துறை
கேள்வி: நாட்டின் பாதுகாப்புத் துறையை வலுப்படுத்த உங்கள் நிறுவனத்தின் திட்டம் என்ன?
பதில்: பாதுகாப்புத் துறையில் தற்போது 40-45 வரை உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டுவருகிறது. இதனை அடுத்த ஐந்து ஆண்டுகளில் 75 விழுக்காடாக உயர்த்த வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டார். அதேநேரத்தில் ஏற்றுமதியையும் உயர்த்த வேண்டும். அடுத்த ஐந்து ஆண்டுகளில் 5 பில்லியன் டாலர் ஏற்றுமதி இலக்கை எட்ட வேண்டும். தொழில்நுட்ப ரீதியாக பாதுகாப்புத் துறையை வலுப்படுத்த ஆய்வுகள் நடந்துவருகிறது. நம்மிடம் வலுவான ஏவுகணைகள், ரேடார்கள், சோனார் கருவிகள், துப்பாக்கிகள், மின்னணு கருவிகள் உள்ளிட்டவை உள்ளன. இதுமட்டுமின்றி குண்டு துளைக்காத ஜாக்கெட்டுகள், காலணிகள் மற்றும் தொலைத்தொடர்பு கருவிகள், ஜாமர் கருவிகள் உள்ளன.
மோசமான சாதனை
கேள்வி: இந்தியா 18-20 பில்லியன் அமெரிக்க டாலர் வரை பாதுகாப்பு தளவாடங்களைக் கடந்தாண்டு இறக்குமதி செய்துள்ளது. இது எப்போது பாதியாகக் குறையும்?
பதில்: நான் உறுதிப்பட கூறுகிறேன். அடுத்த ஐந்து அல்லது பத்து ஆண்டுகளில் உள்நாட்டு உற்பத்தி 75 விழுக்காடாக அதிகரிக்கப்படும்.
ஒரே தொழில்நுட்பம்
கேள்வி: இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பால் ஆகாஷ் ஏவுகணைகள் உருவாக்கப்பட்டது. இஸ்ரேலின் ரபேஃல் தொழில்நுட்பத்தால் உருவான ஸ்பைடர், டெர்பி மற்றும் பைதான் ஆகிய ஏவுகணைகள் ஆகியவை வலிமையில் சமஅளவிலானவை. ஸ்பைக் ஏவுகணைகளும் இதேபோன்றுதான். ஆனாலும் ராணுவம் ஹெலினா எதிர்ப்பு ஏவுகணைகளை ஏன் உருவாக்கவில்லை?
பதில்: செல்போனின் செயலிகள் போன்று, பல்வேறு வகையான ஏவுகணைகள் மற்றும் தொழில்நுட்பங்களின் பயன்பாடு வேறுபட்டது. ஆனாலும் சேவைகளில் ஒரு தெளிவான திட்டங்கள் உண்டு. ஆகவே ஆகாஷ் மற்றும் டெர்பியை நாம் இணைக்க முடியாது. ஒரு ஆயுதம் சேர்க்கப்படுவதற்கும், நிராகரிக்கப்படுவதற்கும் பின்னணியில் ஒரு தெளிவான சிந்தனை இருக்கும். இதுவரை ரூ. 25 ஆயிரம் கோடி மதிப்பிலான ஆகாஷ் ஏவுகணைகள் வாங்கியுள்ளோம்.
பூர்விக, உற்பத்தி தொழிற்நுட்ப பகிர்வு
கேள்வி: வெளிநாட்டினர் தங்களின் அறிவுசார் சொத்துகள் (உற்பத்தி தகவல்கள்) பகிரப்படவில்லை என்று கூறுகிறார்கள். உண்மையில் நாடு இறக்குமதி செய்யும்போது டன் கணக்கில் பேப்பர் வருகிறது. ஆனால் உற்பத்தி வடிவமைப்பு வருவதில்லை. இந்த இடைவெளியை எவ்வாறு அணுகுகிறீர்கள்?
பதில்: என்னதான் வெளிநாட்டு தொழில்நுட்பம் என்றாலும் அவர்கள் முழுமையான தொழில்நுட்பத்தை வழங்குவதில்லை. அதனால்தான் நாமே தொழில்நுட்பத்தை உருவாக்க வேண்டும். பின்னர் அபிவிருத்தி செய்ய வேண்டும்.
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் தலைவர் ஜி. சதீஷ் ரெட்டி ஈடிவி பாரத்துக்கு பிரத்யேக பேட்டி இந்த தொழிற்நுட்பங்களை உருவாக்க பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) முயற்சிகள் செய்துவருகிறது. நமது தொழில்நுட்பம் பூர்விகமானது. ஆனால் வெளியிலிருந்து வரும் தொழில்நுட்பம் வெறும் உற்பத்தி தொழில்நுட்பமாகும். ஆகவே தொழில்நுட்பத்தைக் கண்டறிந்து அதனை பயன்படுத்தி திறன்களை வளர்க்க வேண்டும்.காப்புரிமைகேள்வி: அறிவுசார் தகவல்களை (தொழில்நுட்பம்) தனியார் பங்களிப்புடன் உருவாக்குவதற்கு தங்களின் கொள்கைகள் அனுமதியளிக்கிறதா?
பதில்: தொழில்துறை உற்பத்தி வளர்ச்சிக்கு அவசியம் என்றால் காப்புரிமைகளை பெற்றுக்கொள்ளலாம். இந்திய தொழில்துறையின் கதவுகள் திறந்தே உள்ளன.
இவ்வாறு ஈடிவி பாரத் செய்தியாளர் கிருஷ்ணானந்த் திரிபாதி கேட்ட கேள்விகளுக்கு பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் தலைவர் ஜி. சதீஷ் ரெட்டி பதிலளித்தார்.
இதையும் படிங்க: பாதுகாப்பு கண்காட்சி 2020: இந்தியா-ரஷ்யா இடையே 14 ஒப்பந்தங்கள் கையெழுத்து
Intro:Body:
Summary: In an exclusive interaction with ETV Bharat’s Krishnanand Tripathi, Chairman of Defence Research and Development Organisation (DRDO), Dr G Satheesh Reddy said the country will achieve 75% indigenisation in next 5-10 years.
Lucknow: As per SIPRI (Stockholm International Peace Research Centre) database, India was one of the world’s largest arms importer for several years in a row in the last decade.
The country still imports defence equipment worth $18-20 billion a year.
The government is trying to change the situation in the defence sector through its ‘Make in India’ initiative.
The focus of the government is on design, development and manufacture of weapons in the country with greater participation of private-sector defence manufacturers.
In an exclusive interaction with ETV Bharat’s Krishnanand Tripathi, Chairman of Defence Research and Development Organisation (DRDO), Dr G Satheesh Reddy said the country will achieve 75% indigenisation in the next 5-10 years.
DRDO is India’s apex defence research establishment. The interaction took place on the side lines of DefExpo India 2020.
ETV BHARAT: What are your organisation’s plan for strengthening the defence sector in the country?
G SATHEESH REDDY: Firstly, today we are close to 40-50% content indigenisation in the armed forces and this has to go up beyond 75%, that is what hon’ble Pradhan Mantri Ji has said. And we also need to improve our exports. In fact, we need a lot of exports. He has given a target of $5 billion in coming years. DRDO being the frontier research and development organisation, we need to plan what all are the technologies that we need to develop. What all are the systems that we need to develop.
Today, in many areas, we have become very strong capability wise. We are very strong in missiles, radars, sonars, torpedoes, electronic warfare systems and guns. We want to make a variety of systems in these areas and ensure that there are no imports in these areas. So this is one of the ways by which we can reduce the imports. Also, we can think of exporting in these areas.
So then there are other technologies like we have communication systems, jamming systems, our SDRs and our life sciences related aspects. We have bullet proof jackets, shoes and many other things.
ETV BHARAT: Last year, India imported defence equipment worth $18-20 billion. By when the country would be able to reduce these imports by half?
G SATHEESH REDDY: I am saying that in the next 5-10 years our indigenous content will definitely go up to 75%.
ETV BHARAT: Second thing, we see a lot of duplication, in case of Akash missile developed by DRDO, the user went ahead with Spyder missile system developed by Israel’s Rafael Industries that uses Derby and Python rockets, though both of them have similar range. Same is the case with Spike missile, army didn’t by Helina anti-tank missiles.
G SATHEESH REDDY: The application of various varieties of missiles and technologies are different, based on that people buy which can be used, which can be mobile, which can be used for what range and applications and all that. So, there is a definite clear cut plan among the services: what all are the weapons that they have, what all are the weapons that they should deploy and what all are the weapons that they should be inducting in what phases and all that. So somewhere, some phasing out of some weapon will also be there, some weapons will be inducted and there will be longing for some other weapon systems. So there is a clear cut plan with which they go.
So we cannot combine Akash and Derby, they are different class. But look at the indigenous content, Akash missiles worth Rs 25,000 crores have been purchased.
There has been a stress and definite importance given to the indigenous content in a big way. And the portion of indigenous content will be going up in the coming years and armed forces are pushing for indigenous systems in a big way.
ETV BHARAT: When we speak to the industry people, they say that though they are getting into collaboration with foreign players but IPRs (Intellectual Property Rights) are not shared with them. In fact, when the country used to import weapons, tons and tons of papers came to India but the real reasoning for selecting or abandoning a particular design was never given to India. How do you propose to bridge this gap?
G SATHEESH REDDY: The point is that whenever you are trying to get a technology from abroad and if it is a latest technology then it is always very clear that they will not give complete knowledge to you. That is why any country which has developed a technology, it has developed the technology within the country.
So we need to develop. That is what DRDO is trying to do today. So all the technologies that DRDO is developing is completely indigenous and the technology that is coming from outside is just manufacturing technology.
Naturally, wherever you have technology, you use the in house technology. And those things, where you don’t have the technology, you use a technology which is a manufacturing technology also, you have to live with that.
ETV BHARAT: Do your policies permit you to share your Intellectual Property Rights (IPR) with private sector so that their capacities can also be built?
G SATHEESH REDDY: You have already seen that we already made all our patents open with the Indian industry so that they can use. And we have made it available for the growth of the Industry.
Conclusion: