கராச்சி துறைமுகத்தில் இந்திய கடற்படைக் கப்பல்கள் மேற்கொண்ட தீர்க்கமான கடற்படை நடவடிக்கையை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 4ஆம் தேதி கடற்படை நாளாக கொண்டாடப்படுகிறது. இந்த நாள் 1971ஆம் ஆண்டு இந்திய-பாக். போரில் பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் வெற்றியைக் குறிப்பிடுகிறது.
இந்நாள் தொடர்பாக பேசிய கடற்படைத் தளபதி அட்மிரல் கரம்பீர் சிங், "1971 ஆம் ஆண்டு இந்திய-பாக். போரில் இந்தியாவின் 50 ஆண்டுகால வெற்றியை நினைவுகூரும் வகையில் 'ஸ்வர்னிம் விஜய் வர்ஷ்' தொடங்கப்பட்டது. இந்தாண்டு மிகவும் சிறப்பு வாய்ந்தது ஆகும்.
1971 போரில், எங்களின் மூத்த வீரர்கள் சிலர் முக்கியப் பங்கு வகித்தனர். நாங்கள் உடல் ரீதியாகத் தனித்தனியாக இருக்கலாம், ஆனால் எப்போதும் சமூக ரீதியில் ஒன்றிணைந்துள்ளோம்" எனத் தெரிவித்தார்.