மகாராஷ்டிரா மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் விரைவில் நடக்கவிருக்கிறது. இன்னும் ஓரிரு நாட்களில் தேர்தல் தேதி அறிவிக்கப்படும். அதனைத் தொடர்ந்து பிரதமர் மோடி மகாராஷ்டிர மாநிலம் நாசிக் நகரில் தேர்தல் பரப்புரையை மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது, "ஒவ்வொரு காஷ்மீர் மக்களையும் நாம் கட்டியணைத்துக் கொண்டு புதிய சொர்க்கத்தை உருவாக்க வேண்டும். ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதால், அங்கு வசிக்கும் மக்களுக்கு பயங்கரவாதிகளிடம் இருந்தும், வன்முறையில் இருந்தும் விடுதலை கிடைக்கும். மேலும், இந்த நடவடிக்கை எனக்கு திருப்திகரமாக இருக்கிறது.
அங்கு வசிக்கும் மக்களின் கனவுகள் நிறைவேற தொடங்கியுள்ளன. நீண்ட கால வன்முறையில் இருந்து அங்கு வசிக்கும் தாய்மார்கள், பெண்கள், இளைஞர்கள் உள்ளிட்டோர் அதில் இருந்து வெளிவரத் தொடங்கியுள்ளனர். ஜம்மு-காஷ்மீரின் அரசியலமைப்பை முழுமையாக நடைமுறைப்படுத்துவது ஒரு அரசாங்கத்தின் முடிவு மட்டுமல்ல. 130 கோடி இந்தியர்களின் உணர்வுகளை கருத்தில் கொண்டு செய்யப்பட்டது" என்றார்.
இதையும் படிங்க: ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்தது சர்தார் வல்லபாய் பட்டேலின் கனவு