ETV Bharat / bharat

விவசாயிகளுக்குக் கருணை காட்டமாட்டோம் - உச்ச நீதிமன்றம் திட்டவட்டம் - தேசிய தலைநகர் பகுதியில் காற்று மாசு

டெல்லி: நாட்டின் தலைநகர் பகுதியில் காற்று மாசு அதிகரிக்கக் காரணமாக உள்ள விவசாயிகளுக்குக் கண்டிப்பாகக் கருணை காட்ட மாட்டோம் என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

Delhi pollution
author img

By

Published : Nov 5, 2019, 11:00 AM IST

நாட்டின் தலைநகர் பகுதியில் காற்று மாசு அபாயகரமான அளவை எட்டியுள்ளது. டெல்லியின் பல பகுதிகளில் காற்று தர அளவீடு 450-க்கு மேல் உள்ளது. காற்று மாசு காரணமாகத் தலைநகர் பகுதியிலுள்ள பள்ளிகளுக்கு விடுமுறையும் அளிக்கப்பட்டது. அபாயகரமான அளவை எட்டியுள்ள காற்று மாசு குறித்த வழக்கு ஒன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அருண் மிஸ்ரா, தீபக் குப்தா அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

Delhi pollution
பூங்காவில் ஏற்பட்டுள்ள காற்று மாசு

அப்போது நீதிபதிகள், "எந்த மாநிலத்திலும் இனி விவசாயக்கழிவுகள் எரிக்கக் கூடாது. இதை மாநில அரசுகள் உறுதிப்படுத்த வேண்டும். இனிமேலும் இது போன்ற நிகழ்வுகள் தொடர்ந்தால் விவசாயிகள் மீது மட்டுமல்லாமல் தலைமைச் செயலர் முதல் பஞ்சாயத்து அலுவலர் வரை அனைவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்

நாகரிகமடைந்த எந்தவொரு நாட்டிலும் இப்படி இருக்காது. விவசாயிகளுக்குச் சிக்கல்கள் இருக்கலாம். ஆனால் அதற்காக அவர்கள் காற்றை அசுத்தப்படுத்த அனுமதிக்க முடியாது. உங்கள் வாழ்வாதாரத்தைக் காப்பறிக்கொள்ள மற்றவர்களை அழிப்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமுடியாது. இனி காற்று மாசு ஏற்படக் காரணமாக உள்ள விவசாயிகள் மீது கண்டிப்பாகக் கருணை காட்டமாட்டோம்" என்று எச்சரித்தனர்.

தேர்தல்களில் மட்டுமே அக்கறை காட்டும் மாநில அரசுகள், பொறுப்பில்லாமல் இதுபோல மக்களைச் சாகவிடுகின்றன என்று கடுமையாக விமர்சித்தனர்.

போதுமான அளவு பொதுப் போக்குவரத்தை வழங்காத டெல்லி அரசைக் கண்டித்த நீதிபதிகள், தற்போது அமலிலுள்ள 'ஆட் - ஈவன்' திட்டத்தின் நன்மைகள் குறித்தும் அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிட்டனர். மேலும், மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் 3000 புதிய பேருந்துகளை இயக்கப்போவதாகக் கூறிய டெல்லி அரசு தற்போதுவரை 150 புதிய பேருந்துகளைக் கூட இயக்கவில்லை என்றும் விமர்சித்தனர்.

Delhi pollution
இந்தியா கேட் பகுதியில் மோசமடைந்த காற்று மாசு

கட்டுமானப் பணிகளிலிருந்து வெளியாகும் தூசும் காற்று மாசு ஏற்பட முக்கிய காரணம் என்பதால், தேசிய தலைநகர் பகுதியில் அனைத்துவிதமான கட்டுமானப் பணிகளுக்கும் தடைவிதித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: மூச்சு விட முடியாத அளவுக்கு காற்று மாசு - திணறும் தலைநகர்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.