மும்பை: தனது மனைவிக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ள நிலையில், நாங்கள் நோட்டீஸ்களுக்கெல்லாம் பயப்பட மாட்டோம் என சிவசேனா மூத்தத் தலைவர் சஞ்சய் ராவத் கூறியுள்ளார்.
சஞ்சய் ராவத் பத்திரிகையாளர் சந்திப்பில், “அமலாக்க இயக்குநரகம் தனது மனைவி வர்ஷா ராவத்துக்கு சம்மன் அனுப்பியதில் அரசியல் பழிவாங்கும் செயல். வருமான வரித்துறை, அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ உள்ளிட்ட நிறுவனங்கள் அரசியல் நோக்கத்திற்காக பயன்படுத்தப்படுகின்றன.
எதிர்க்கட்சிகளை துன்புறுத்துவதற்கு பாஜக இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகிறது. இது பாஜகவின் தோல்வி மனப்பான்மையை காட்டுகிறது. சிவசேனா ஒருபோதும் நோட்டீஸ்களுக்கெல்லாம் பயப்படாது. அமலாக்கத்துறை பாஜகவின் கிளியாக மாறிவிட்டது. நான் 10 ஆண்டுகளுக்கு முன்பு நண்பர் ஒருவரிடமிருந்து கடனாக பெற்ற விவகாரம் தொடர்பாக தற்போது விசாரிக்கின்றனர்.
இதனை விசாரிக்க 10 ஆண்டுகளா? பாஜகவின் சொத்து ஓரே ஆண்டில் ரூ.1600 கோடியாக அதிகரித்துள்ளது. இதனை யார் விசாரிப்பார்கள்? என்றார்.
இதையும் படிங்க: பாஜக அல்லாத கூட்டணிக்கு ஆதரவு: தமிழ்நாடு சிவசேனா அறிவிப்பு