மியான்மரில் போடோலாந்து தேசிய ஜனநாயக முன்னணியின் 30 உறுப்பினர்கள் பல ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தனர். இந்த இயக்கத்தின் தலைவர் சரோய்க்வாரா, பொதுச் செயலாளர், தலைமை தளபதி, நிதிச் செயலர் ஆகியோர் புரட்சியை கைவிட்டுவிட்டு மத்திய, மாநில அரசுகளிடம் அமைதி பேச்சுவார்த்தையில் ஈடுபட அஸ்ஸாம் மாநிலத்துக்குச் சென்றுள்ளனர்.
இது குறித்து இயக்கத் தலைவர் சரோய்க்வாரா கூறுகையில், "அமைதி பேச்சுவார்த்தையில் ஈடுபடவே இங்கு வந்துள்ளோம். போடேலாந்து விவகாரத்தை தீர்க்கும்விதமாக மத்திய, மாநில அரசுகளிடம் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளோம்.
அமைதி பேச்சுவார்த்தையின் மூலம் பிராந்தியத்தில் அமைதி நிலவிடும் என நம்புகிறேன். அனைவரும் அமைதியையே விரும்புகின்றனர். எங்களின் ஒரே கோரிக்கை போடோலாந்துதான்" என்றார்.
அஸ்ஸாம் சென்ற இயக்க உறுப்பினர்களுக்கு கிராம மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதையும் படிங்க: 'ஹைட்ரோகார்பன் திட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டும்' - நாராயணசாமி