மேற்கு வங்க மாநிலத்திலுள்ள பங்குரா மாவட்டத்தில் அமைந்துள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இடிந்துவிழும் காட்சி பார்ப்பதற்கு பயங்கரமானதாய் உள்ளது. இந்தத் தொட்டி கட்டி இரண்டு ஆண்டுகளே ஆன நிலையில், இடிந்து விழுந்திருப்பது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தக் காட்சியை அப்பகுதிவாசி ஒருவர் தன்னுடைய செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றியிருந்தார். உயரமான தொட்டி சீட்டுக்கட்டைப் போல் சரிந்துவிழுந்ததைப் பார்த்து மிரண்ட நெட்டிசன்கள் வீடியோவை வைரலாக்கி வருகின்றனர்.
இதையும் படிங்க: 'டிரைவரை ரிவேர்ஸ் எடுக்க வைத்த ஒற்றை யானை' - துரத்தும் வைரல் வீடியோ