மகாராஷ்டிரா, வட கர்நாடகா, ஆந்திர ஆகிய மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால், கோதாவரி ஆற்றில் நீர் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தவளேஸ்வரம் தடுப்பணையை சுற்றியிருக்கும் பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இந்தப் பகுதிகளில் வரும் காலங்களில் கனமழை அதிகரிக்கும் என இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.
மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் மூன்று அணிகள், பாதுகாப்பு படையைச் சேர்ந்த 127 பேர் ஆந்திர மாநிலத்தில் உள்ள வீராவாரம், சிந்துரு ஆகிய பகுதிகளில் குவிக்கப்பட்டுள்ளனர். இதேபோல், கிருஷ்ணா ஆற்றிலும் நீர் பெருக்கு ஏற்பட்டதால், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு இடம்பெயர்ந்துள்ளனர்.