ETV Bharat / bharat

அபாய கட்டத்தில் பல ஆறுகள்... பிகாரில் 8 மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு! - வடக்கு பீகாரில் கனமழை

பாட்னா: கந்தக் நதியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால் பல ஆறுகள் நீர் அபாய கட்டத்திற்கு மேல் பாய்ந்தோடுவதால், எட்டு மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

பீகார்
பீகார்
author img

By

Published : Jul 23, 2020, 9:02 AM IST

பிகாரில் கந்தக் நதியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையினால் மேற்கு சாம்பாரன் மாவட்டத்தில் உள்ள வால்மிகிநகர் தடுப்பணையிலிருந்து அதிகப்படியான நீர் வெளியேற்றப்பட்டதால், வடக்கு பிகாரின் சில பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பல ஆறுகள் ஆபத்து நிலையை அடைந்துள்ளதால் 4 லட்சம் மக்கள் பாதிப்படைய வாய்ப்புள்ளதாக பேரிடர் மேலாண்மை குழுவினர் அறிக்கை வெளியிட்டுள்ளனர்

அந்த அறிக்கையில், "வால்மிகிநகர் தடுப்பணையிலிருந்து வெளியேறும் நீரின் அளவு 3.39 லட்சம் கியூசாக இருந்த நிலையில், செவ்வாய்க்கிழமை 4.28 லட்சம் கியூசாக அதிகரித்துள்ளது. இந்தத் திடீர் நீர் அதிகரிப்பானது நேபாளத்தின் காண்டக் ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் சமீபத்தில் பெய்த கனமழையினால் ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளது. இதே போல், லாரியா - நர்கதியகஞ்ச் சாலையில் மூன்று முதல் நான்கு அடி வரை வெள்ளப்பெருக்கு பாய்ந்தோடுகிறது. இதுவரை மூன்று பேர் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர். கந்தக் ஆற்றின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால், தாழ்வான பகுதிகளில் உள்ள பல கிராமங்களை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. அதே போல், அருகில் தாழ்வான பகுதிகளில் உள்ள கிராம மக்கள் வேறு இடத்திற்கு செல்லுமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தர்பங்கா மாவட்டத்தின் பாகமதி நதியும் தொடர்ந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. நீரின் வெளியேற்றம் அதிகரித்ததால் கோபால்பூரில் பாதுகாப்பு அணை உடைந்து பிந்தருச், ஹரிஹார்பூர் பஞ்சாயத்துகளின் பல கிராமங்களில் வெள்ள நீர் பரவியுள்ளது. அதே போல், ககேரியாவில் கோசி, பக்மதி, பழைய கந்தக் ஆறுகள் ஆகியவை ஆபத்து கட்டத்தை அடைந்துள்ளது.வெள்ளம் சூழந்த வீடுகளில் சிக்கித் தவிக்கும் மக்கள் அரசாங்க உதவி கிடைக்குமா என்ற ஏக்கத்தில் காத்திருக்கின்றனர்.

பிகார் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கை சமாளிக்க 16 என்.டி.ஆர்.எஃப் குழுவினர் வெவ்வேறு மாவட்டங்களில் நிறுத்தப்பட்டுள்ளனர். அதில், மூன்று குழுவினர் கோபால்கஞ்ச் மாவட்டத்திலும், பெட்டியா, மோதிஹாரி, சரண் ஆகிய மாவட்டங்களில் தலா இரண்டு அணிகளும், மீதமுள்ள மற்ற மாவட்டங்களில் தலா ஒரு அணியும் தயார் நிலையில் உள்ளனர். அவர்களிடம் அதிநவீன வெள்ள மீட்பு உபகரணங்கள், தகவல்தொடர்பு உபகரணங்கள், மருத்துவ கிட், டைவிங் செட் போன்ற பல மீட்பு பணிக்கு தேவையான சாதனங்கள் உள்ளன.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.