கோடை வெயில் நாடு முழுவதும் சுட்டு எரித்து வரும் நிலையில், குஜராத் மாநிலம் நவ்சாரி கிராமத்தில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதன் விளைவாக ஆள்துழை கிணறுகளை தோண்டி, மாசுப்பட்ட தண்ணீரை கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
இது குறித்து பேசிய அத்தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ ஆனந்த் படேல், "இந்த பகுதியில் கடுமையான தண்ணீர் பிரச்னை நிலவி வருகிறது. தண்ணீர் தட்டுப்பாடு பற்றி பல முறை சட்டப்பேரவையில் புகார் அளித்தும், மாநில அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் மாசுப்பட்ட தண்ணீரை பயன்படுத்தும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சுத்தமான தண்ணீரை பெற 200 கிலோ மீட்டர் தூரம் வரை செல்ல வேண்டிய நிலையுள்ளது", என்று வருத்தம் தெரிவித்தார்.