ETV Bharat / bharat

காணொலி: வெள்ளை நிற மலைபாம்பை, புடலங்காய் போல் தூக்கிய இளைஞர்! - அல்பினோ பைதான்

பெங்களூரு: வெள்ளை நிற மலைபாம்பை (பைதான்) புடலங்காய் போல் அசால்டாக தூக்கிய இளைஞரின் வைரல் காணொலியை காணலாம்.

white python  python in Mangalore  Albino Python  huge snakes  வெள்ளை நிற மலைபாம்பு  கர்நாடகா  பைதான் மலைபாம்பு  அல்பினோ பைதான்  மங்களூரு உயிரியல் பூங்கா

author img

By

Published : Jun 5, 2020, 7:11 AM IST

கர்நாடகாவின் தட்சிணகன்னடா மாவட்டம் பந்த்வாலா தாலுகா காவல்கட்டே கிராமத்தில் உள்ள வீட்டில் பெரிய வெள்ளை நிற மலைப்பாம்பு ஒன்று புகுந்துவிட்டது. இந்த மலைப்பாம்பு வெள்ளை நிறத்தில் காணப்பட்டதால், மக்கள் அதன் அருகே செல்ல அச்சப்பட்டு அங்கும் இங்குமாக அழைந்தனர்.

இறுதியாக பாம்பு பிடிப்பதில் கைதேர்ந்த இளைஞரான கிரண் சம்பவ பகுதிக்கு வரவழைக்கப்பட்டார். அவரின் கண்கள் பாம்பை கண்டதும், மயிலின் தோகை கார்மேகத்தை கண்டது போல் மகிழ்ச்சியில் விரிந்தது.

அடுத்த சில நொடிகளில் பாம்பை லபக் என பிடித்து கைகளால் தூக்கினார் அந்த இளைஞர். பின்னர், அவர் கொண்டு வந்திருந்த சாக்கு மூட்டையில் கட்டினார். இதையடுத்து அந்த மலைப்பாம்பை வனஅலுவலர்களிடம் ஒப்படைத்தார். இந்த மலைபாம்பு மங்களூருவிலுள்ள பிலிகுலா உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட உள்ளது.

காணொலி: வெள்ளை நிற மலைபாம்பை, புடலங்காய் போல் தூக்கிய இளைஞர்!

பொதுவாக பருவமழை நெருங்கும்போது, ஊர்வனங்கள் மற்றும் பூச்சிகள் பாதுகாப்பான இடங்களைத் தேடி தங்கள் வாழ்விடத்தை விட்டு வெளியேறுகின்றன. இந்த வெள்ளை நிற மலைப்பாம்பு, “அல்பினோ பைதான்” என்று விஞ்ஞான ரீதியாக அழைக்கப்படுகிறது என்பது கூடுதல் தகவல்.

இதையும் படிங்க: சர்வதேச தடுப்பூசி கூட்டணிக்கு 15 மில்லியன் டாலர் அளிக்க நரேந்திர மோடி உறுதி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.