உத்தரப் பிரதேசம் மாநிலம், மதுராப் பகுதியில் உள்ள சிவபால நாத் நகர் பகுதியைச் சேர்ந்த இரண்டரை வயது குழந்தை ஒன்று வீட்டின் வெளிப்புறத்தில் விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது ஆறு தெரு நாய்கள் அக்குழந்தையை சூழ்ந்துகொண்டு சரமாரியாக கடித்ததால், குழந்தை வலிதாங்க முடியாமல் கதறியுள்ளது.
இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் பதறியடித்துவந்து உடனே நாய்களிடம் இருந்து குழந்தையை காப்பாற்றி சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். அங்கு குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இது குறித்து குழந்தையின் தந்தை அமித் மிட்டல் கூறுகையில், பல ஆண்டுகளாக இந்த பிர்சனையை எதிர்கொண்டு வருகிறோம். இந்த தெரு நாய்கள் குழந்தை மட்டுமல்லாமல் பெரியவர்களையும் கடிக்கிறது. இது குறித்து பலமுறை அரசு அலுவலர்களுக்கு தகவல் கொடுத்தும் அவர்கள், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றார்.
இதையறிந்த மாவட்ட ஆட்சியர் நாய்களை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.