அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் 36 மணி நேர பயணமாக இந்தியா வந்தார். அகமதாபாத் நகரில் நடந்த நமஸ்தே ட்ரம்ப் பேரணியில் கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் பேசிய ட்ரம்ப், இந்தியா விஸ்வாசமானது, அமெரிக்கா நேசிக்கிறது என்று கூறினார்.
ட்ரம்ப் பேச்சு
மேலும் இந்தியாவுக்கு அதிநவீன போர் ஹெலிகாப்டர்களை வழங்க இந்தியா காத்திருக்கிறது என்றும் அவர் கூறினார். இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:
அமெரிக்கா தங்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் நோக்கத்தில் மிகச் சிறந்த ராணுவத்தை வைத்துள்ளது. நம்மிடம் உலகின் மிகச்சிறந்த ராணுவ கருவிகள் உள்ளன. மிகச்சிறந்த ராணுவ கருவிகளை நாங்கள் உருவாக்குகிறோம். அதனை தற்போது இந்தியாவுடன் இணைந்து கையாள விரும்புகிறோம். அதன்படி இந்தியாவுடன் 300 கோடி டாலர் வரை ராணுவ ஒப்பந்தம் கையெழுத்திடப்படும்.
கடின உழைப்பாளி
நரேந்திர மோடி இரவும்-பகலும் உழைக்கும் ஒரு விதிவிலக்கான தலைவர். அவர் மிகவும் கடுமையான உழைப்பாளி. மிகச்சாதாரண நிலையிலிருந்து இந்த உயரத்தை அவர் எட்டியுள்ளார். ஆரம்பக் காலங்களில் தேநீர் விற்பனையாளராக இருந்து இந்த நிலையை அவர் எட்டியுள்ளார்.
மக்கள் அவரை நேசிக்கின்றனர். 2019 தேர்தல் அதற்குச் சான்று. இந்தியாவும் அமெரிக்காவும் தற்போது நெருங்கிய இயற்கை கூட்டாளிகள். இரு நாடுகளும் சித்தாந்த ரீதியாக ஒரே நேர்க்கோட்டில் பயணிக்கின்றன.
பயங்கரவாதம்
பயங்கரவாதம், பயங்கரவாதிகளை ஒழிக்க இரு நாடுகளும் உறுதிபூண்டுள்ளன. நாங்கள் பாகிஸ்தானுடனும் நல்ல தொடர்பைவைத்துள்ளோம். பாகிஸ்தானுடனும் அமெரிக்கா இணைந்து செயல்படுகிறது. பாகிஸ்தானில் தற்போது மாற்றங்கள் நிகழ்கின்றன.
தெற்காசிய நாடுகளில் அமைதி நிலவ பாகிஸ்தான் ஒத்துழைக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.
இவ்வாறு ட்ரம்ப் கூறினார்.
இதையும் படிங்க: மு.க.ஸ்டாலின் விமர்சனம், ஒ.பி.ஆர். பதிலடி