குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக டெல்லியில் ஜாமியா மிலியா பல்கலைக்கழக மாணவர்கள், கடந்த ஜனவரியில் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், கடந்த பிப்ரவரி 15ஆம் தேதி டெல்லி ஜந்தர் மந்தரை நோக்கி பேரணியாக செல்ல ஜாமியா மிலியா மாணவர்கள் முயன்றனர்.
மாணவர்களின் இப்போராட்டத்தில் பொது மக்களும் பெரும் திரளான எண்ணிக்கையில் திரண்டனர். அப்போது, அங்கு வந்த காவல் துறையினர் மாணவர்கள் மீது தடியடி நடத்தி கலைத்தனர். அதேபோல் பல்கலைக்கழக வளாகத்திற்குள் சென்று போலீசார் அவர்கள் மீது தாக்குதல் நடத்தினர்.
அதுமட்டுமின்றி ஜாமியா பல்கலைக்கழக நூலகம் வரை சென்ற காவல் துறையினர் அங்கிருந்த மாணவர்களை மூர்க்கத்தனமாக தாக்கினர். இந்த வீடியோவை அப்பல்கலைக்கழக கமிட்டி, தனது சுட்டுரை பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
இந்தத் தாக்குதலில் கண்பார்வையை இழந்த எல்.எல்.எம் மாணவர் முகம்மது மினாஜுதின் கூறுகையில், 'இதில் என்னுடைய தவறு என்ன இருக்கிறது? நான் பல்கலைக்கழக வாளகத்திலுள்ள பழைய நூலகத்தில் படித்து கொண்டிருந்தோம். அப்போது, அங்கு வந்த காவல் துறையினர் எங்களை தாக்கினர்'.
இந்த சம்பவத்துக்குப் பிறகு பல்கலைக்கழக வளாகத்தில் இருப்பதற்கே பயமாக இருக்கிறது. அதுமட்டுமின்றி இனி நூலகம் செல்வதற்கே பயமாக இருக்கிறது என்றார்.
காவல்துறையினர் பல்கலைக்கழக மாணவர்களை மூர்க்கத்தனமாக தாக்கும் சிசிடிவி காட்சிகள், தற்போது வலைத்தளத்தில் வேகமாக பரவி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க...வண்ணாரப்பேட்டை தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்து புதுச்சேரியில் பல இடங்களில் இஸ்லாமியர்கள் ஆர்ப்பாட்டம்