சத்தீஸ்கர் மாநிலம், ராஜ்நந்த்கான் மாவட்டத்தில் பேன்திரி என்ற பகுதியில் தனிமைப்படுத்தல் மையம் ஒன்று செயல்பட்டுவருகிறது. வெளிமாநிலங்கள், மாவட்டங்களிலிருந்து வரும் தொழிலாளர்கள் அங்கு 14 நாள்கள் தனிமைப்படுத்தப்பட்ட பின்னரே வீட்டுக்கு அனுப்பிவைக்கப்படுகின்றனர்.
இந்நிலையில், அங்கு பணிபுரியும் சுகாதார ஊழியர் ஒருவர் அம்மையத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள தொழிலாளரை மூர்க்கத்தனமாகத் தாக்கும் காணொலி சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது.
சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள இந்தச் சம்பவம் குறித்து விளக்கமளித்த அம்மாவட்ட தலைமை மருத்துவ அலுவலர், "தாக்கப்பட்ட தொழிலாளர் இரண்டு மணி நேரம் தனிமைப்படுத்தல் மையத்தைவிட்டு வெளியே சென்றதாகக் கூறப்படுகிறது. அவர் திரும்பிவந்ததும் போதையில் சுகாதாரப் பணியாளர் அவரைத் தாக்கியுள்ளார். இதனால் அவரை வேறு மையத்துக்கு மாற்றியுள்ளோம்" என்றார்.
இதையும் படிங்க : அட்லான்டாவில் ஆப்ரிக்க அமெரிக்கர் ஒருவர் சுட்டுக்கொலை: காவல் துறை தலைவர் ரிசைன்!