உத்தரகாண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் எம்எல்ஏ ஹரிஸ் தாமி, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடச் சென்றார். அப்போது, பித்தோராகரில் வெள்ளத்தால் மூழ்கியிருந்த பகுதியை அவர் கடந்தபோது வழுக்கி விழுந்து வெள்ள நீரில் சிறிது தூரம் அடித்துச் செல்லப்பட்டார்.
இதையடுத்து, அவரது கட்சித் தொண்டர்களும், ஆதரவாளர்களும் உடனடியாக அவரை மீட்டனர். இதில், எம்எல்ஏ ஹரிஸ் தாமிக்கு சிறிய காயம் ஏற்பட்டது.
இதையும் படிங்க: நோய்வாய்ப்பட்ட மனைவியை வண்டியில் அழைத்துச் சென்ற கணவர்...!