உத்திரப் பிரதே மாநிலத்தைச் சேர்ந்த ரவுடி விகாஸ் துபே கடந்த சில நாட்களுக்கு முன்பு என்கவுன்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்நிலையில், அடுத்த அதிரடியாக பாராபங்கி பகுதியில் ரவுடி ஒருவர் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
உத்தரப் பிரதேச மாநில காவல்துறையின் சிறப்பு படை இந்த என்கவுன்ட்டரை நிகழ்த்தியுள்ளது. கொல்லப்பட்ட ரவுடி திங்கு கப்பாலா என்று அடையாளம் காணப்பட்டுள்ளார். திங்கு கப்பாலாவின் தலைக்கு அம்மாநில அரசு ஒரு லட்சம் ரூபாய் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
உத்திரப் பிரதசே மாநிலத்தில் சமீபகாலமாக என்கவுன்ட்டர்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன. யோகி ஆதித்யநாத் ஆட்சியல் மட்டும் 100க்கும் மேற்பட்ட என்கவுன்ட்டர்கள் நடந்திருக்கின்றன.
இதையும் படிங்க: ராஜஸ்தானில் ஆட்சியை கவிழ்க்க பாஜக சதி: ராகுல் குற்றச்சாட்டு!