மத்திய அரசுக்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை ரூ.50 ஆயிரம் கோடியை, கடந்த 14ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை வோடபோன் கடைப்பிடிக்கவில்லை. முதல்கட்டமாக ரூ.2,500 கோடி கட்டுவதாக கூறியது.
இதனை நீதிமன்றம் மறுத்துவிட்டது. இந்த நிலையின் இன்று நீதிமன்றத்தில் ஒரே நாள் இரவில் நிலுவைத் தொகையை செலுத்தக் கூறினால் எப்படி முடியும்? நிறுவனத்தை இழுத்து மூடிவிட வேண்டியதுதான் என்று நிறுவனத்தின் வழக்குரைஞர் முகுல் ரோத்தகி கூறியதாக செய்திகள் வெளியானது.
இந்த நிலையில், வோடபோன், ஐடியா நிறுவன பங்குகள் கடும் சரிவை சந்தித்தன. மும்பை பங்குச் சந்தையில் 8.77 விழுக்காடு சரிவை சந்தித்து, ரூ.3.12ம், தேசிய பங்குச் சந்தை 7.35 விழுக்காடு சரிந்து, ரூ.3.15 இழப்பை சந்தித்தது. ஆக வோடபோன், ஐடியா பங்குகள் 16 விழுக்காடு வரை சரிவை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஆப்பிள் நிறுவனத்தையும் விட்டு வைக்காத கொரோனா வைரஸ்!