அமராவதி (ஆந்திர பிரதேசம்): எல்ஜி பாலிமர்ஸ் வாயு கசிவு குறித்த கண்காணிப்பு படக்கருவியின் பதிவுகள் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கின்றன.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகேயுள்ள ஆர்.ஆர். வெங்கடபுரம் கிராமத்தில் இயங்கிவரும் எல்ஜி பாலிமர்ஸ் தொழிற்சாலையிலிருந்து 'பாலிவினைல் குளோரைடு' என்ற அபாயகரமான வாயு திடீரென கசிந்ததில் பெரும் ரசாயன விபத்து நேற்று (மே 15) ஏற்பட்டது.
தென் கொரியாவுக்கு ஸ்டைரீனை அனுப்பும் எல்.ஜி. பாலிமர்ஸ்
இந்தத் தொழிற்சாலையிலிருந்து கசிந்த வாயு சுமார் 3 கி.மீ. சுற்றளவிற்கு பரவியது. உயிர் குடிக்கும் இந்த வேதிப்பொருளை சுவாசித்த அப்பகுதி மக்களுக்கு கண்கள், தோல் ஆகியவற்றில் எரிச்சல் ஏற்பட்டதுடன், வீதிகளில் மக்கள் கொத்து கொத்தாக மயக்கமடைந்து விழுந்தனர்.
இதில், சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 12ஆக அதிகரித்திருந்தது. விஷவாயுவை சுவாசித்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தோரின் குடும்பத்தாருக்கு ஒரு கோடி ரூபாய் நிதியுதவி அளிக்கப்படும் என ஆந்திர அரசு அறிவித்தது.
விசாக் விஷவாயு விபத்து நடந்தது எப்படி? வெளியானது முதல் தகவல்
இதுமட்டுமல்லாமல், இந்த வேதிபொருளின் தாக்கம் தற்போது குறையாது என்றும், இதனை சுவாசித்த மக்களுக்கு எதிர்காலத்தில் உடல் ரீதியிலான கோளாறுகள் வரும் அபாயம் உள்ளதாகவும் சூழலியல் ஆர்வலர்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.
இவ்வேளையில் இதன் அபாயத்தை உணர்த்தும் விதமாக கண்காணிப்பு படக்கருவியின் பதிவுகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.