ETV Bharat / bharat

என்கவுன்ட்டர் செய்யப்பட்ட துபே: நடந்தது என்ன? திடுக்கிடும் தகவல்கள் - விகாஸ் துபே

காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் உள்பட 8 காவலர்கள் ரவுடிகளால் சுட்டு கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் தேடப்பட்டுவந்த பிரபல ரவுடி விகாஸ் துபே, இன்று காவல் துறையினரால் என்கவுன்ட்டர் செய்யப்பட்டுள்ளார். இதில், பல மர்மங்களும், ரகசியங்களும் அடங்கியுள்ளன.

துபே
துபேி
author img

By

Published : Jul 10, 2020, 8:57 PM IST

மும்பையிலிருந்து வரும் நிழல் உலக தாதாக்களின் கதைகளை கேட்டு சளித்து போன மக்களை, கான்பூர் என்கவுன்ட்டர் மூலம் திரும்பி பார்க்க வைத்தவர் பிரபல ரவுடி விகாஸ் துபே. கடந்த சில நாள்களாக பிரைம் டைம் ஷோவின் மையமாக இருந்த இவரை காவல் துறையினர் தனிப்படை அமைத்து என்கவுன்ட்டர் செய்துள்ளனர். ஜூலை 3ஆம் தேதி, கொலை முயற்சி வழக்கில் கைது செய்ய வந்த காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் உள்பட 8 காவலர்களை இவரின் ஆட்கள் சுட்டுக்கொலை செய்தனர். கடந்த ஒரு வாரமாக இவரை பிடிக்க காவல் துறையினர் பல முயற்சிகள் செய்த நிலையில், இன்று காலை அவர்களிடம் துபே பிடிபட்டதாகவும், ஆனால் தப்பி ஓட முயற்சித்த அவரை சுட்டுக் கொன்றதாகவும் காவல் துறையினர் தெரிவிக்கின்றனர்.

அப்படி என்னதான் நடத்தது?

கான்பூர் என்கவுன்ட்டர்:

ஜூலை 2: கொலை முயற்சி வழக்கில் விகாஸ் துபேவை கைது செய்ய காவல் துறையினர் பிக்ரு கிராமத்திற்கு சென்றனர். அப்போது விகாஸ் துபேவின் ஆள்கள் காவல் துறையினர் மீது நடத்திய தாக்குதலில் காவல் துறை துணை கண்காணிப்பாளர் உள்ளிட்ட எட்டு காவலர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

கொலை செய்யப்பட்ட துபேவின் கூட்டாளிகள்

ஜூலை 3: கான்பூர் என்கவுன்ட்டர் சம்பவம் நடைபெற்று ஒரு சில மணி நேரங்களில், என்கவுன்ட்டர் சம்பவத்திற்கு தொடர்புடையதாகக் கூறி, பிரேம் பிரகாஷ் பாண்டே, அதுல் துபே ஆகியோர் காவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

சந்தேகத்திற்குரிய காவலர்கள்

ஜூலை 4: கைது செய்ய காவல் துறையினர் வருவதாக துபேவுக்கு முன்னதாகவே தகவல் தெரிவிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. காவல் நிலைய அலுவலர் வினய் திவாரி, காவல் ஆய்வாளர் கே.கே. சர்மா ஆகியோரிடம் காவல் துறையினர் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டனர். இதனைத் தொடர்ந்து, 10 காவலர்கள் சவுபேபூர் காவல் நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டனர்.

ஜூலை 5: துபேவின் கூட்டாளி தயா சங்கர் அக்னிகோத்ரி கைது செய்யப்பட்டார். என்கவுன்ட்டர் குறித்து முன்னதாகவே தகவல் கொடுக்கப்பட்டதாகவும் அதற்கு பின்னர்தான் தாக்குதல் நடத்த பிற கூட்டாளிகளை துபே அழைத்ததாகவும் சங்கர் விசாரணையில் தெரிவித்தார்.

தொடர் கைது நடவடிக்கை

ஜூலை 6: துபேவின் இடது கையாக கருதப்படும் அவரின் தாயார் கைது செய்யப்படுகிறார். எட்டு காவலர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக, சங்கரின் மனைவி ரேகா காவலில் எடுக்கப்படுகிறார்.

இடைநீக்கம் செய்யப்பட்ட காவலர்கள்

ஜூலை 7: வினோத் திவாரி, கே.கே. சர்மா ஆகியோர் கைது நடவடிக்கை குறித்து துபேவிடம் செல்போன் மூலம் தொடர்புகொண்டு துப்பு கொடுத்தது விசாரணையில் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அவர்கள் கைது செய்யப்பட்டு இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

சுட்டுக் கொல்லப்பட்ட துபேவுக்கு நெருக்கமானவர்கள்

ஜூலை 8: துபேவின் வலது கையாக கருதப்படும் அமர் துபே என்கவுன்ட்டர் மூலம் கொல்லப்படுகிறார். பிரபாத் மிஸ்ரா உட்பட துபேவின் பல கூட்டாளிகள் கைது செய்யப்படுகின்றனர்.

மத்தியப் பிரதேசத்தில் தலைமறைவான துபே

ஜூலை 9: துபேவின் கூட்டாளிகளான பிரபாத் மிஸ்ரா இட்டாவாவில் வைத்தும் பவுவா துபே கான்பூரில் வைத்தும் என்கவுன்ட்டர் செய்யப்படுகின்றனர். மத்தியப் பிரதேச உஜ்ஜயினி மாகாளி கோயிலில் துபே உள்ளதாக தகவல் வெளியானது. இதனைத் தொடர்ந்து, ஃபரிதாபாத்திற்கு துபே சென்றுள்ளார். விடுதியின் சிசிடிவி கேமராவில் அவர் நடமாடுவது பதிவாகியது. இருப்பினும் அங்கிருந்து அவர் தப்பித்தார்.

என்கவுன்டர் செய்யப்பட்ட துபே

ஜூலை 10: இன்று காலை எஸ்யூவி கார் மூலம் அவர் தப்பிக்க முயன்றுள்ளார். ஒரு வாரமாக தேடப்பட்டுவந்த அவரை காவல் துறையினர் சுட்டுக் கொன்றனர்.

இதையும் படிங்க: துபேயின் ஓட்டுனர் தயா சங்கர் அக்னிஹோத்ரியிடம் காவல்துறை விசாரணை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.