ETV Bharat / bharat

கான்பூர் என்கவுண்டர் தொடர்பான ஆடியோ க்ளிப் வைரல்! - கான்பூர் என்கவுண்டர்

கான்பூர்: விகாஸ் துபேவின் கூட்டாளி சஷிகாந்த் கைது செய்யப்பட்டதை அடுத்து, அவரது மனைவி உறவினருடன் தொலைபேசியில் உரையாடிய ஆடியோ கிளிப் சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது.

Vikas Dubey encounter: Another audio clip of Shashikant Pandey's wife caught on tape

author img

By

Published : Jul 15, 2020, 11:36 PM IST

கான்பூரில் காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் உள்பட 8 காவலர்கள் ரவுடிகளால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் தேடப்பட்டுவந்த பிரபல ரவுடி விகாஸ் துபே, காவல் துறையினரால் ஜூலை 10ஆம் தேதி என்கவுன்ட்டர் செய்யப்பட்டார்.

இதையடுத்து விகாஸ் துபேவின் கூட்டாளியும், கான்பூரில் காவல்துறையினரை சுட்டுக் கொன்ற சம்பவத்தில் தொடர்புடையவரான, சஷிகாந்த் என்கிற சோனு பாண்டே, நேற்றுமுன்தினம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

அவரிடம் இருந்த இரண்டு ஏகே 47 துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்நிலையில், சஷிகாந்த் கைது செய்யப்பட்டதை அடுத்து அவரது மனைவி மனு பாண்டே உறவினருடன் தொலைபேசியில் உரையாடிய ஆடியோ கிளிப் சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது.

அந்த உரையாடலில் மனு பாண்டே, உனது மொபைலில் உள்ள எனது கணவர் எண் உட்பட அனைவரது மொபைல் எண்களையும் அழித்துவிடுங்கள். மொபைல் போனில் உள்ள பேட்டரியை கழட்டி வைத்து போலீஸ் வந்து கேட்டால் எனக்கு எதுவும் தெரியாது என்று கூறுமாறு அவர் அறிவுறுத்துகிறார்.

மேலும், எனது கணவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். இந்த அழைப்பிற்கு பிறகு நான் என்னுடைய மொபைல் போன் மற்றும் சிம் கார்டை உடைக்கப்போகிறேன். அதனால் இனி என்னால் உன்னிடம் மொபைலில் பேச முடியாது.

ஆனால் எனது கவலை எல்லாம் என் கணவர் மீதுதான் உள்ளது என பேசியுள்ளார். இவர் பேசிய இந்த உரையாடலை காவல்துறையினர் பதிவு செய்துள்ளனர். இந்த ஆடியோ கிளிப் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.இதன் அடிப்படையில் தற்போது காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.