ETV Bharat / bharat

விகாஸ் தூபே என்கவுன்ட்டர்: விசாரணைக்கான கால அவகாசம் நீட்டிப்பு - சிறப்பு விசாரணைக் குழு

லக்னோ: விகாஸ் தூபே என்கவுன்ட்டர் வழக்கில், சிறப்பு விசாரணைக் குழுவின் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

விகாஸ் துபே
விகாஸ் துபே
author img

By

Published : Aug 6, 2020, 5:59 PM IST

உத்தரப் பிரதேச மாநிலம், கான்பூரில் எட்டு காவலர்களைக் கொலைசெய்த வழக்கு உள்ளிட்ட 60க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி விகாஸ் தூபே, கடந்த ஜூலை 10ஆம் தேதி என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. இதனிடையே, தூபே மற்றும் அவரின் கூட்டாளிகளின் என்கவுன்ட்டர் தொடர்பான வழக்குகளை விசாரிக்க மூன்று பேர் கொண்ட சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டது.

கூடுதல் தலைமைச் செயலாளர் சஞ்சய் பூஸ்ரெட்டி, கூடுதல் காவல் துறை இயக்குநர் (ADG) ஹரிராம் சர்மா, காவல் துறை துணைத் தலைவர் (DIG) ரவீந்திர கவுர் ஆகியோர் விசாரணைக் குழுவில் இடம்பெற்றிருந்தனர்.

ஜூலை 31ஆம் தேதிக்குள் விசாரணைக்குழுவின் அறிக்கையை சமர்ப்பிக்க அரசு உத்தரவிட்ட நிலையில், விசாரணைக்கான கால அவகாசத்தை நீட்டிக்கக்கோரி குழு கோரிக்கை விடுத்தது. இந்நிலையில், அதற்கான கால அவகாசம் ஆகஸ்ட் 28ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தற்போதுவரை, 50 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. இருப்பினும், பல சாட்சியங்களிடம் விசாரணை நடத்தப்படவில்லை. தூபே குறித்த முக்கிய விவரங்கள் அடங்கிய ஆதாரங்கள் இன்னும் சிறப்பு விசாரணைக் குழுவிடம் சமர்ப்பிக்கப்படவில்லை.

இதையும் படிங்க: சாதியால் நேர்ந்த கொடூரம்: காதலர்கள் குடிசைக்குள் பூட்டி எரிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.