புதுச்சேரியில் விஜய் சேதுபதி ரசிகர் மன்றத்தின் தலைவராக இருந்தவர் மணிகண்டன்(36). இவர் நேற்றிரவு(அக்.05) தனது இருசக்கர வாகனத்தில் மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள தனது வீட்டிற்கு சென்றுகொண்டிருந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்து சென்ற 4 பேர் கொண்ட அடையாளம் தெரியாத கும்பல் நெல்லித்தோப்பு பகுதியில் மணிகண்டனை வழிமறித்து சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடினர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல் துறையினர், உயிருக்கு போராடிக்கொண்டிருந்த மணிகண்டனை மீட்டு காவல் துறை வாகனத்தில் அவரை அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மணிகண்டனை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதனைத்தொடர்ந்து இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த உருளையன்பேட்டை காவல் துறையினர் கொலை செய்துவிட்டு தப்பியோடிய அடையாளம் தெரியாத கும்பலை தேடிவருகின்றனர்.
இதையும் படிங்க: புதுச்சேரியில் மிதிவண்டி குறித்து விழிப்புணர்வுப் பேரணி!