ஹரியானாவின் மேவாட்டைச் சேர்ந்த 13 பேர் கொண்ட கும்பல், தங்கள் நண்பர்கள் மற்றும் உறவினரிடமிருந்து தனியார் வங்கி ஏடிஎம் அட்டைகளை சேகரித்து பாதுகாப்பற்ற எஸ்பிஐ ஏடிஎம்களில் கொள்ளையடித்துள்ளனர்.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தனிப்படை அமைத்து, ஏடிஎம் கொள்ளையில் ஈடுபட்ட கும்பலை தேடிவந்தனர். ஆந்திராவைச் சேர்ந்த காவல்துறையினர் குழு ஹரியானாவுக்கு அனுப்பப்பட்டு குற்றவாளிகளை கைது செய்ய வியூகம் அமைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுவந்தனர்.
இதனிடையே, விஜயவாடாவில் ஹரிஷ் கான், அப்துல்லா கான் நசிம் அகமது, ஃபாரூக் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர். ஹரியானாவின் மேவாட்டில் நியாஸ் முகமது, வாஹித் கான் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட பிற குற்ற வழக்குகள் மூலம் அடையாளம் காணப்பட்டனர். அவர்கள் அனைவரும் ரிமாண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
எஸ்பிஐ ஏடிஎம்மில் மின் இணைப்பை துண்டித்து பணத்தை கொள்ளையடித்துவந்ததும் பணத்தை ஏடிஎம் அட்டைதாரர்களுடன் பகிர்ந்து கொண்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
எஸ்பிஐ அலுவலர்களின் அலட்சியத்தால் தான் இந்த திருட்டு சம்பவங்களுக்கு காரணம் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். ஜூலை 4 முதல் ஆகஸ்ட் 21, 2020 வரை, குற்றஞ்சாட்டப்பட்ட கும்பல் 12 ஏடிஎம்களில் சுமார் 41 லட்சத்து 50 ஆயிரத்து 500 ரூபாய் கொள்ளையடித்துள்ளனர்" என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.