ETV Bharat / bharat

விஜய்சேதுபதி ரசிகர் மன்றத் தலைவர் வெட்டிக்கொலை! - fan club leader assassinated in puducherry

புதுச்சேரி: நெல்லித்தோப்பு மீன் மார்க்கெட் அருகே விஜய்சேதுபதி ரசிகர் மன்றத் தலைவர் மணிகண்டன் என்பவரை மூன்று பேர் சேர்ந்த கும்பல் அரிவாளால் சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்தது.

murder
murder
author img

By

Published : Oct 5, 2020, 6:41 PM IST

புதுச்சேரி கோவிந்தசாலை அந்தோணியார் கோவில் வீதியைச் சேர்ந்தவர் மணி (எ) மணிகண்டன் (37). பெயிண்டர் வேலை செய்துவந்த இவர் நடிகர் விஜயசேதுபதி ரசிகர் மன்றத் தலைவராக இருந்தார். இவருக்கு விஜி (எ) விஜயலட்சுமி என்ற மனைவியும் 4 வயதில் மகளும், 1 வயதில் மகனும் உள்ளனர். சில நாள்களாக அவர் குடும்பத்துடன் லாம்பர்ட் சரவணன் நகரில் உள்ள தனது மாமியார் வீட்டில் தங்கியிருந்தார்.

மணிகண்டனின் உறவினர் ஆட்டுப்பட்டியைச் சேர்ந்த ராஜசேகர். இவர் மணிகண்டனுக்குப் போட்டியாக ஆட்டுப்பட்டி பகுதியில் ரசிகர் மன்றம் நடத்திவந்துள்ளார். இதில் இருவருக்கும் அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்துள்ளது.

இதனிடையே இரண்டு ரசிகர் மன்றத்தையும் ஒருங்கிணைத்து நடத்தினால் பிரச்னை வராது என்ற யோசனை குறித்த பேச்சுவார்த்தை நேற்று (அக். 4) மாலை 3 மணிக்கு அண்ணா திடலில் நடந்தது. ஆனால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத நிலையில் மணிகண்டன் அங்கிருந்து புறப்பட்டு வீட்டிற்குச் சென்றுள்ளார்.

இந்நிலையில் நெல்லித்தோப்பு மீன் மார்க்கெட் அருகே இருசக்கர வாகனத்தில் சென்றபோது அவரை மூன்று பேர் கொண்ட கும்பல் வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளது. இதில் மணிகண்டன் ரத்த வெள்ளத்தில் மயங்கி கீழே விழுந்தார்.

இது குறித்து உருளையன்பேட்டை காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து காவல் கண்காணிப்பாளர் மாறன், ஆய்வாளர் சஜித், உதவி ஆய்வாளர் ரமேஷ் மற்றும் காவலர்கள் விரைந்து சென்று உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த மணிகண்டனை மீட்டு புதுவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

அங்கு அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் ரசிகர் மன்ற பிரச்னை காரணமாக அவர் கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. இந்தக் கொலை தொடர்பாக காவல் துறையினர் மேற்கொண்டு விசாரணை நடத்திவருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.