இன்று நடைபெற்ற புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தின் 28ஆவது பட்டமளிப்பு விழாவில் இவ்வாறு அவர் பேசினார்.
இது குறித்து விரிவாகப் பேசிய வெங்கையா நாயுடு, "அனைத்து கட்டமைப்பும் பல்கலைக்கழகங்களில் இருக்கக் கல்வி, ஆராய்ச்சியில் ஆகியவற்றில் மாணவர்கள் முழுக் கவனத்தைச் செலுத்த வேண்டும்.
பல்கலைக்கழக சமூக பொறுப்புணர்வுத் திட்டத்தில் இணைத்துக் கொள்ளுங்கள், மரம் நடுதல், நீர்நிலைத் தூய்மை ஆகிய சமூகப் பணிகளில் உங்களை ஈடுபடுத்திக் கொள்ளும்போது நீங்கள் நாட்டின் சிறந்த குடிமகனாகலாம். இளைஞர்களிடம் நேர்மறை மனப்பான்மையே தற்போது அவசியம். எதிர்மறை எண்ணமல்ல.
மேலும் மாணவர்கள் வகுப்பில் நேரத்தைச் செலவிடுவதைத் தவிர, மற்ற நேரத்தில் சமூகத்திலும் இருக்க வேண்டும். கிராம மக்கள் பிரச்னையைப் புரிந்துகொள்ளுங்கள் விவசாயத்தைக் கற்றுக் கொள்ளுங்கள்.
தற்போதைய உலகத்தில் மாற்றம் படுவேகமாக நிகழ்கிறது. பணிபுரிதல், வெற்றியின் அளவீடு, இணைந்து பணியாற்றுதல் உள்ளிட்டவை புதிய வழியில் செல்கிறது. தாய்மொழிக் கல்வி அவசியம், கூடுதல் மொழிகளைக் கற்பதில் தவறில்லை. இந்தி, ஆங்கிலம் கற்றுக் கொள்ளுங்கள். எவ்வளவு மொழி கற்றாலும் தாய்மொழியைத்தான் முதலாக நினைக்க வேண்டும்" என அறிவுரை வழங்கினார்.
இந்த விழாவில் 225 பி.ஹெச்.டி., 40 எம்.பில்., 202 தங்கப் பதக்கங்கள், மூன்றாயிரத்து 614 பட்ட மேற்படிப்பு 10 ஆயிரத்து 46 பட்டப்படிப்பு, 148 பிஜி டிப்ளமோ, இரண்டாயிரத்து 820 தொலைக்கல்வி பயின்றோருக்கு வெங்கையா நாயுடு பட்டங்களை வழங்கினார்.
இந்நிகழ்வில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, முதலமைச்சர் நாராயணசாமி, வருவாய்த் துறை அமைச்சர் ஷாஜகான், நாடாளுமன்ற உறுப்பினர் கோகுலகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: மதம் என்பது வழிபாடுக்கு மட்டுமே: வெங்கையா நாயுடு பேச்சு