ETV Bharat / bharat

'வீட்டை விட்டு வெளியேற வேண்டாம்'- நாட்டு மக்களுக்கு வெங்கையா நாயுடு வேண்டுகோள் - self-curfew

டெல்லி: கரோனா வைரஸ் பரவுவதை திறம்பட கட்டுப்படுத்த, மக்கள் ஊரடங்கு உத்தரவுக்கு கட்டுப்பட்டு வீடுகளில் தங்கியிருக்க வேண்டும் என குடியரசுத் துணை தலைவர் வெங்கையா நாயுடு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Vice President M Venkaiah Naidu  M Venkaiah Naidu  Vice president urges  janta curfew  self-curfew  கரோனா வைரஸ், மக்கள் ஊரடங்கு, ஜனதா ஊரடங்கு, வெங்கையா நாயுடு

author img

By

Published : Mar 21, 2020, 11:56 PM IST

கரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக நாளை (மார்ச்22) மக்கள் ஊரடங்கு உத்தரவை கடைப்பிடிக்க வேண்டும் என நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்நிலையில் குடியரசுத் துணை தலைவர் வெங்கையா நாயுடு நாட்டு மக்களுக்கு விடுத்துள்ள செய்தியில், நாளை (ஞாயிற்றுக்கிழமை) மக்கள் வீட்டிற்குள் இருங்கள். இது கரோனா பரவலை கட்டுப்படுத்த ஒரு சிறந்த நடவடிக்கையாகும்.

சமூக தொலைதூரத்தின் மூலம் 'உங்களையும் மற்றவர்களையும் கவனித்துக்கொள்வது' என்று மருத்துவ வல்லுநர்கள் மற்றும் உலக சுகாதார அமைப்பால் முக்கியமாக பரிந்துரைக்கப்படுகிறது.

தொற்றுநோயால் தேசத்திற்கு முன்வைக்கப்பட்ட சவாலை கூட்டாக எதிர்த்துப் போராட அரசியல் கட்சிகள், பொதுமக்கள் சமூக அமைப்புகள் என அனைவரும் துணைபுரிய வேண்டும்.

சவாலை எதிர்கொள்ள மற்றவர்களைப் பயிற்றுவிப்பதும் ஊக்குவிப்பதும் ஒவ்வொரு குடிமகனின் பொறுப்பாகும்.

இதனால் நாட்டு மக்கள் நாளை தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என்று நான் வேண்டுகோள் விடுக்கின்றேன்” என கூறியுள்ளார்.

இதையும் படிங்க:கரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்ட பிரபல பின்னணி பாடகிக்கு எதிராக வழக்கு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.