குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவிற்கு நேற்று டெல்லியில் பாராட்டு விழா நடைபெற்றது. அப்போது பேசிய அவர், "அனைத்து அரசியல் கட்சியினரும், ஊடகத்தினரும் சிந்தித்துச் செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
மேலும் பேசிய அவர், நடந்து முடிந்த மக்களவைத் தேர்தல் பரப்புரையில் அரசியல் கட்சியினர் முன்வைத்த கருத்துகள் தரமிழந்து காணப்பட்டன. அனைத்து கட்சியினருமே எதிர்த்தரப்பின் தனிமனித வாழ்வையே விமர்சித்தனர். இவ்வாறு தனிமனிதனை விமர்சிப்பதை தவிர்க்க வேண்டும் என தெரிவித்தார்.