தெலங்கானா மாநிலத்தில் 27 வயதான திஷா பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொடூரமாகக் கொல்லப்பட்டார். அவரின் உடலும் பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்டது. நாடு முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த வழக்கில் குற்றஞ்சாட்ட நான்கு பேரும் போலீசாரின் துப்பாக்கிக் குண்டுக்கு பலியாகினர்.
போலீசாரின் என்கவுன்டர் நடவடிக்கைக்கு எதிராக மாநில உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதுதொடர்பான வழக்கு ஒன்றை விசாரித்த உச்ச நீதிமன்றம், உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி வி.எஸ்.சிர்புர்கர் தலைமையில் மூன்று பேர் கொண்ட குழுவை அமைத்தது.
இந்த குழுவில் உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி மற்றும் சிபிஐ முன்னாள் இயக்குனர் ஆகியோரும் உள்ளனர். இந்த குழு என்கவுன்டர் தொடர்பாக விசாரணை நடத்தி ஆறு மாதத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய உள்ளது.
தெலங்கானா என்கவுன்டரில் கொல்லப்பட்ட நான்கு பேரின் உடலும் காந்தி அரசு மருத்துவமனையில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. திஷா கடந்த மாதம் 28ந் தேதி நள்ளிரவில் கொல்லப்பட்டார் என்பது நினைவுக் கூரத்தக்கது.
இதையும் படிங்க: தெலங்கானா என்கவுன்டருக்கு எதிராக நீதிமன்றத்தில் மனு!