டெல்லி: குடியரசுத் துணை தலைவரும், மாநிலங்களவை தலைவருமான வெங்கையா நாயுடு ஞாயிற்றுக்கிழமை (ஜன.31) அரசியல் கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை (பிப்.1) மத்திய வரவு செலவு திட்ட அறிக்கையை (பட்ஜெட்) காலை 11 மணிக்கு மக்களவையில் உரையாற்றி தாக்கல் செய்கிறார்.
இந்நிலையில், ஜனவரி 29 அன்று, பொருளாதார ஆய்வு 2020-21 நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. முன்னதாக, மார்ச் 31 ஆம் தேதியுடன் முடிவடையும் நடப்பு நிதியாண்டில் இந்திய பொருளாதாரம் 7.7 சதவீதம் சுருங்கக்கூடும் என்றும் வருகிற நிதியாண்டில் 11 சதவீதமாக உயரும் என்றும் பொருளாதார ஆய்வுகள் முன்னறிவித்துள்ளன.
இதற்கிடையில் மத்திய வரவு செலவு திட்ட அறிக்கை நாளை தாக்கலாகிறது. அதன்படி, பட்ஜெட் அமர்வின் முதல் பகுதி பிப்ரவரி 15 வரை தொடரும். அமர்வின் இரண்டாம் பகுதி மார்ச் 8 முதல் ஏப்ரல் 8 வரை நடைபெறும்.
இந்நிகழ்வு மாநிலங்களவையில் (ராஜ்யசபா) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரையும், மக்களவையில் (லோக் சபா) மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் ஜீரோ ஹவர் மற்றும் கேள்வி நேரத்துடன் செயல்படும்.
இந்நிலையில் குடியரசுத் துணை தலைவர் டெல்லியில் இன்று அரசியல் கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
இதையும் படிங்க: மூடலின் விளிம்பில் 90 சதவீத ஹோட்டல்கள்- மத்திய பட்ஜெட்டில் சுற்றுலாத்துறைக்கு வரி விலக்கு கிடைக்குமா?