இது குறித்து காவலர் ஒருவர் கூறுகையில், ”மேற்கு வங்கத்தின் பல்வேறு பகுதிகளுக்கு விற்பனை செய்வதற்காக 15 வாகனங்களில் மதுபான பாட்டில்கள் கடத்தப்படுவதாக உள்ளூர் மக்களுக்கு தெரிந்துள்ளது.
இதனையடுத்து உள்ளூர் மக்கள் அந்த வாகனங்களை தடுத்து நிறுத்த முயன்றனர். ஆனால், எட்டு வாகனங்கள் தப்பிவிட்டன. மீதம் இருந்த ஏழு வாகனங்களை மக்கள் சுற்றி வளைத்தனர்.
பின்னர் பொதுமக்கள் எங்களுக்குத் தகவல் தெரிவித்தனர். நாங்கள் அவர்களை கைது செய்து அவர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றோம்” என்றார்.
ஊரடங்கு காரணமாக மதுபான விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அதிகளவிலான மது பாட்டில்கள் கடத்தப்பட்டது மேற்கு வங்கத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: அசாமில் திறக்கப்பட்ட மதுபான கடைகள் .... சமூக விலகலைக் கடைப்பிடித்த மது பிரியர்கள்!