டெல்லியில் இதுவரை 2 ஆயிரத்து 376 பேருக்கு கரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50 ஆக உள்ளது. இந்த நிலையில் டெல்லி மெஹ்ராலி பகுதி வார்டு மூன்றில் வசிக்கும் காய்கறி வியாபாரி ஒருவருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் அவருடன் தொடர்பில் இருந்தவர்களை சுகாதாரத்துறை அலுவலர்கள் தனிமைப்படுத்தி அவர்களின் சளி, ரத்த மாதிரிகளை கரோனா பரிசோதனைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.
இதுகுறித்து அப்பகுதி சுகாதாரத்துறை அலுவலர்கள் கூறுகையில், நாங்கள் எல்லா விற்பனையாளர்களையும் கண்காணித்து வருகிறோம். மெஹ்ராலியில் அனுமதி பெறாமல் யாரும் கடைகள் அமைக்க வேண்டாம். அதேபோல பொதுமக்களும் அத்தியாவசியப் பொருள்கள் விற்பனையாளர்களிடம் வன்முறைகளில் ஈடுபடக்கூடாது எனத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: ’டெல்லி தனிமைப்படுத்தல் முகாமில் தவிக்கும் தமிழர்கள்’