ETV Bharat / bharat

மோடிக்கு சவால் விடும் விவசாயிகள் -வாரணாசி தொகுதியில் போட்டி - நிசாமாபாத்

தெலுங்கானா: நிசாமாபாத் மாவட்டத்தில் உள்ள வாரணாசி மக்களவை தொகுதியில் ஐம்பது விவசாயிகள், பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக தேர்தலில் போட்டியிட திட்டமிட்டுள்ளனர்.

மோடி
author img

By

Published : Apr 24, 2019, 10:46 AM IST

உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி மக்களவைத் தொகுதியில் பிரதமர் மோடி போட்டியிடுவதையடுத்து வரும் 28ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய இருக்கிறார். வாரணாசி தொகுதியில் இவரை எதிர்த்து பிரியங்கா காந்தி போட்டியிட இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், மோடியை எதிர்த்து தெலுங்கானா மாநிலத்தின் நிசாமாபாத் மாவட்டத்தில் உள்ள ஐம்பது விவசாயிகள் போட்டியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இதுகுறித்து அனைத்து விவசாயிகள் கூட்டியக்கத்தின் தலைவர் தெய்வசிகாமணி, மோடியை எதிர்த்து விவசாயிகள் சங்கம் சார்பில் தாழ்த்தப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட பெண்கள் சாலோ திட்டத்தின் கீழ் வேட்புமனு தாக்கல் செய்ய இருக்கின்றனர். மோடியின் ஐந்தாண்டு கால ஆட்சியில் விவசாயிகள் வஞ்சிக்கப்பட்டு வருகின்றனர் என்ற அவர் மோடியை வீழ்த்துவதே தங்களது நோக்கம் என்று தெரிவித்தார். கடந்த தேர்தலில், விவசாய விளைபொருட்களுக்கு லாபகரமான விலை, நதிகள் இணைப்பு, விவசாயக் கடன்களுக்கு தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை பிரதமர் மோடி அளித்தார் ஆனால், எதையும் நடைமுறைப்படுத்தவில்லை. விவசாயிகள் சங்கம் சார்பாக வைக்கப்பட்ட கோரிக்கைகள் எதையும் அவர் நிறைவேற்றவில்லை என்றார்.

எனவே மோடி வேட்புமனு தாக்கல் செய்யும் இரண்டு நாட்களுக்கு முன்பு நிசாமாபாத் மாவட்டத்தைச் சேர்ந்த ஐம்பதுக்கும் மேற்பட்ட விவசாயிகள் வேட்புமனு தாக்கல் செய்வார்கள் என தெய்வசிகாமணி தெரிவித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.